பெரிய ஹிட்டர்ன்னு சொன்னாங்க. ஆனா இதுவரைக்கும் அவரு ஒன்னும் பண்ணல – வெ.இ வீரரை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா

Chopra
- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்றுவரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது சிறிதும் சுவாரஸ்யத்திற்கு குறைவின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரானது தற்போது முதல் பாதியை நெருங்கி விட்டது என்றே கூறலாம். ஏனெனில் அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட 7 போட்டிகளில் விளையாடி விட்டனர். ஆனால் பெரிய பெரிய ஜாம்பவான் அணிகளாக பார்க்கப்பட்ட அணிகள் புள்ளிப் பட்டியலில் பின்தங்கிய நிலையிலும், புதிதாக இந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமான அணிகள் புள்ளி பட்டியலில் முன்னிலையிலும் உள்ளன. அதேவகையில் இந்த தொடரில் எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்கள் பெரிதளவு சொதப்பி வருகின்றனர்.

Dc

- Advertisement -

மறுபுறம் இளம் வீரர்களாக அறிமுகமாகிய பலர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் டெல்லி அணிக்காக இந்த ஆண்டு 2 கோடியே 80 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரான ரோமன் பவல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடிக்கு பெயர் போன இவர் மிகச் சிறப்பாக போட்டியை முடித்துக் கொடுப்பதில் வல்லவர் என்று கருதப்பட்டது.

இதன் காரணமாக அவரை நம்பி ஒரு ஹிட்டராக டெல்லி அணி தங்களது அணியில் எடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை அவர் விளையாடிய ஐந்து போட்டிகளில் சேர்த்து வெறும் 31 ரன்களை மட்டுமே அவர் குவித்துள்ளதால் அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி டி20 கிரிக்கெட்டில் நல்ல ஸ்ட்ரைக் ரேட் உடன் விளையாடும் அவர் ஐபிஎல் தொடரில் பந்துகளுக்கு ஈடாக கூட ரன்கள் அடிக்கவில்லை என்ற விமர்சனமும் உள்ளது.

powell

இந்நிலையில் ரோமன் பவல்-லின் இந்த தேர்வு குறித்து விமர்சித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : இந்த ஐபிஎல் தொடரில் அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் ரோமன் பவலின் ஆட்டம் என்னை வருத்தமடைய செய்துள்ளது. டெல்லி அணி பின்வரிசையில் பலம் வேண்டும் என்கிற காரணத்தினால் அவரை நம்பி ஒரு ஹிட்டராக ஏலத்தில் எடுத்தது.

- Advertisement -

ஆனால் இதுவரை அவரிடமிருந்து பெரிய ஆட்டம் வரவில்லை. இனி வரும் போட்டிகளிலாவது அவர் ரன்களை குவிப்பாரா? என்பதை காண ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தற்போது உள்ள டெல்லி அணியில் ப்ரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இருப்பதனால் தற்போது டெல்லியில் பலமாக உள்ளது.

இதையும் படிங்க : கிரிக்கெட்டிற்காக புதிய அவதாரத்தை எடுத்துள்ள கேதார் ஜாதவ் – ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ள முக்கிய முடிவு

அவர்கள் இருவருமே அதிரடியான துவக்கம் கொடுத்து வருவதால் பின்வரிசையில் வருபவர்கள் சற்று பதற்றம் இன்றி விளையாடுகின்றனர். நிச்சயம் என்னை பொறுத்தவரையில் டெல்லி அணியின் மிகப்பெரிய பலமாக இந்தாண்டு ப்ரித்வி ஷா மற்றும் வார்னர் ஆகியோர் இருப்பார்கள் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement