ஆர்.சி.பி அணி அவரை கழட்டி விட்டா நல்லா இருக்கும். அவரு வேஸ்ட் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது இந்த ஆண்டோடு சேர்த்து 15 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இந்த ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரும் ஜாம்பவான் அணிகளாக பார்க்கப்படும் மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகளை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும், பெரிய ஆதரவையும் பெற்ற அணியாக பெங்களூர் அணி திகழ்ந்து வருகிறது. ஆனால் இதுவரை அவர்களால் ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்ற முடியாதது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வருத்தமாக உள்ளது.

Rajat Patidar 112

- Advertisement -

நடைபெற்று முடிந்த 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் இவர்கள் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு அணியானது எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்து மீண்டும் ஒரு முறை கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் இந்த பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய பின்னர் பெங்களூரு அணியின் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம் என்றும் அதன் காரணமாக சீனியர் வீரர்கள் சிலரை வெளியேற்ற வேண்டியது அவசியம் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பெங்களூரு அணியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை வெளியேற்றலாம் என்று கூறியுள்ளார்.

Mohammed Siraj De Kock

இதுகுறித்து அவர் கூறுகையில் : முகமது சிராஜை ஆர்சிபி அணியிலிருந்து விடுவித்தால் உங்களால் வேறு ஒரு வேகப்பந்துவீச்சாளரை தேர்ந்தெடுக்க முடியும். அதே வேளையில் அவரை மீண்டும் குறைவான தொகைக்கு அணியில் இணைத்துக் கொள்ளலாம். எனவே அவரை பெங்களூரு அணியில் இருந்து வெளியேற்றுவது நல்லது.

- Advertisement -

மேலும் தற்போதுள்ள பெங்களூர் அணியில் ஹேசல்வுட், ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருவதால் இன்னும் ஓரிரு பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்தால் அது பெங்களூர் அணிக்கு பலமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : போன வருசம் நடந்ததை மனதில் வைத்து டீம் செலக்ட் பண்ணுங்க – இந்தியாவுக்கு அக்தர் எச்சரிக்கை

அவர் கூறியது போலவே நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக செயல்பட்ட முகமது சிராஜ் 15 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். அதோடு அவரது பந்து வீச்சை அனைத்து அணிகளிலும் உள்ள பேட்ஸ்மேன்களும் மிக எளிதாக எதிர்கொண்டு வெளுத்து வாங்கினார்கள் என்றும் கூறலாம்.

Advertisement