அவரது எந்த செயலும் தவறில்லை. அவரது பலமே அதுதான் கோலியின் சைகைக்கு சப்போர்ட் செய்த – முன்னாள் பயிற்சியாளர்

Kohli
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றுவித தொடர்களிலும் இந்திய அணி விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் பெருமளவு விமர்சனத்தை இந்திய அணி சந்தித்து வருகிறது. மேலும் நியூசிலாந்து அணியினர் டி20 தொடரில் அடைந்த தோல்வியை சுதாரித்துக்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் தங்களது பலத்தை நிரூபித்தார்கள்.#

Kohli

- Advertisement -

அவர்களின் திட்டமிட்ட பந்துவீச்சில் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து சொற்ப ரன்களில் வெளியேறியதை இந்த தொடர் முழுவதும் பார்க்க முடிந்தது. இந்திய அணி விளையாடிய ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்திலும் நியூசிலாந்து அணி தனது ஆதிக்கத்தை தெளிவாக நிரூபித்தார்கள். மேலும் தொடர்ந்த அவர்களது ஆதிக்கம் இந்திய அணியை டெஸ்ட் தொடரில் தோல்வியை கொடுத்தது.

இதனால் தற்போது இந்திய அணி கலங்கி நிற்கும் நிலையில் நான்கு இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங்கில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிலும் குறிப்பாக கோலி நான்கு இன்னிங்ஸிலும் சேர்த்து 38 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். மேலும் இந்த ஒட்டுமொத்த சுற்றுப்பயணத்தில் 218 ரன்களை மட்டுமே அவர் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.

Kohli

மேலும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்த மோசமான ஆட்டத்தால் அவரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். பல்வேறு வீரர்கள் அவரை விமர்சனம் செய்தாலும் ஒரு சிலர் அவருக்கு ஆதரவு கரத்தை நீட்டிவருகின்றனர். அதுமட்டுமின்றி நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் அவுட்டாகி செல்லும்போது ரசிகர்களை நோக்கி அவர் செய்த சைகை சர்ச்சையை ஏற்படுத்தியது.

Kohli

இந்நிலையில் இந்த விடயம் குறித்து பேசிய கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறுகையில் : விராட் கோலி எப்பொழுதும் தன்னுடைய எல்லையை தாண்டியது இல்லை. அவரது ஆக்ரோஷத்தை மைதானத்தில் வெளிப்படுத்தியதால் தவறான நடவடிக்கை செய்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் கோலியின் வேகம் சிறிதும் குறைய வில்லை. அவர் எப்போதுமே ஒரு அற்புதமான வீரர் அவரது ஆக்ரோஷம் எப்போதும் அவருக்கு பலம் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement