- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆகஸ்ட் 22இல் ரஞ்சியில் விளையாட முடிவெடுத்து.. திடீரென 24இல் ஓய்வை அறிவித்தது ஏன்? புஜாரா பேட்டி

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடிய செட்டேஸ்வர் புஜாரா அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 – 2023 வரை இந்தியாவுக்காக 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இந்தியா தொடரை வெல்ல புஜாரா முக்கிய பங்காற்றினார்.

அதன் பின் தடுமாற்றமாக விளையாடியதால் கழற்றி விடப்பட்ட அவர் இங்கிலாந்தில் நடைபெற்ற கவுன்டி தொடரில் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் பெரிய ரன்கள் அடிக்க தவறிய அவர் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைத்தார். ஆனாலும் பெரிய ரன்கள் அடிக்கத் தவறியதால் கழற்றி விடப்பட்ட அவருக்கு போட்டியாக இளம் வீரர்கள் வந்தனர்.

- Advertisement -

புஜாராவின் திடீர் ஓய்வு:

அதனால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட புஜாரா கம்பேக் கொடுக்கும் நோக்கத்துடன் அடுத்த 2025/26 ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதாக கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அறிவித்தார். ஆனால் திடீரென முடிவை மாற்றியுள்ள அவர் ஆகஸ்ட் 24ஆம் தேதி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அதற்கான காரணம் குறித்து புஜாரா பேசியது பின்வருமாறு.

“ஓய்வு குறித்து நான் முன்னதாக நினைக்கவில்லை. ஆனால் கடந்த ஒரு வாரமாக நான் விடை பெற இதுவே சரியான நேரம் என்று நினைத்தேன். அந்த முடிவை எடுத்த போது அது எனக்கும் என்னுடைய மொத்த குடும்பத்திற்கும் பெருமையானதாக இருந்தது. இன்றைய நாளில் என்னுடைய சக வீரர்கள், பயிற்சியாளர்கள், துணைப் பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்”

- Advertisement -

பெருமையுடன் ஓய்வு:

“ஏனெனில் எனக்கு இது பெருமையான தருணம். சிறு குழந்தையாக இருந்த போது இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அந்த கனவு முடிந்துள்ளது. இந்தியாவுக்காக விளையாடி என் கேரியரில் நிறைய பெருமையானத் தருணங்களை உருவாக்கியுள்ளேன். ஓய்வு என்பது முற்றிலும் என்னுடைய தனிப்பட்ட முடிவு. அதை சரியான நேரத்தில் நான் எடுத்துள்ளேன்”

“குறிப்பாக உள்ளூர் கிரிக்கெட்டிலும் நிறைய இளம் கிரிக்கெட் வீரர்கள் வந்துள்ளார்கள். எதிர்வரும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடலாம் என்று ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் இளம் வீரர்கள் இப்போதே வாய்ப்பு பெற்றால் பின்னர் அசத்துவார்கள் என்று சமீபத்தில் உணர்ந்தேன். மேலும் கடந்த சில வருடங்களாகவே இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அது குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை”

இதையும் படிங்க: அந்த 5 வருஷம் இந்தியா ஆட்சி செய்ய புஜாராவே காரணம்.. தலை வணங்குறேன்.. சாஸ்திரி, கவாஸ்கர் பாராட்டு

“இன்று எனக்கு மறக்க முடியாத நாள். இந்திய அணியுடன் விளையாடிய போட்டிகள், தொடர்கள், அணியின் செயல்பாடுகள், அனைத்தும் எனக்குப் பெரிது. 2009, 2011 ஆகிய வருடங்களில் எனக்கு பெரிய காயம் ஏற்பட்டது. அதையும் தாண்டி இத்தனை வருடங்கள் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. எனவே இந்தியாவுக்காக நீண்ட வருடங்கள் விளையாட வாய்ப்பு கிடைத்தற்கு நான் நன்றியுடையவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -