மற்ற கேப்டன்களை விடவும் ரோஹித் சர்மா சக்சஸ்புல் கேப்டனாக அசத்த இதுவே காரணம் – புஜாரா புகழாரம்

Pujara 2
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் 6 வெற்றிகளை பதிவு செய்து செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. மேலும் இத்தொடரில் பெரும்பாலான இந்திய வீரர்கள் நல்ல ஃபார்மில் சிறப்பாக செயல்படுவதால் 2011 போல இம்முறை கோப்பையை கண்டிப்பாக வெல்வோம் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனை படைத்த ரோகித் சர்மா இந்தியாவுக்காக 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை போலவே 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் தோல்வியை பதிவு செய்தார். அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் 2023 ஆசிய கோப்பையை வென்று தற்போது 2023 உலகக் கோப்பையில் மிகச்சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து இந்தியா வெற்றிப்பாதையில் நடப்பதற்கு முக்கிய பங்காற்றி வருகிறார்.

- Advertisement -

புஜாரா பாராட்டு:
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 10 முதல் 40 ஓவர்கள் வரையிலான மிடில் ஓவர்களில் எதிரணியை பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் விக்கெட்டுகளை எடுப்பதே வெற்றிக்கான தாரக மந்திரம் என்று புஜாரா தெரிவித்துள்ளார். அந்த சமயங்களில் பவுலர்களை சரியாக மாற்றி விக்கெட்டுகளை எடுப்பதே ரோகித் சர்மாவின் தனித்துவமான கேப்டன்ஷிப் திறமையாக இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

இது போன்ற திறமை பெரும்பாலான கேப்டனிடம் இருப்பதில்லை என்றும் தெரிவிக்கும் அவர் ரோகித் சர்மாவின் வெற்றிகரமான கேப்டன்ஷிப் பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்த தொடர் முழுவதும் அவர் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இந்த உலகக் கோப்பை முழுவதுமாக அவர் அணியை வழிநடத்தும் விதம் வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு வரும் விதத்தை பாருங்கள்”

- Advertisement -

“கடந்த சில போட்டிகளாக முகமது சிராஜ் நல்ல துவக்கத்தை பெறவில்லை. குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் கடந்த 2 – 3 போட்டிகளாக சிராஜ் புதிய பந்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் அவரை மிடில் ஓவர்களில் ரோகித் சரியாக பயன்படுத்துகிறார். அதை பயன்படுத்தி மிடில் ஓவர்களில் சிராஜ் சில விக்கெட்டுகளையும் எடுத்து கொடுத்துள்ளார். அதில் மிடில் ஓவர்களில் ரோஹித் சாதுரியமாக அணியை வழி நடத்துகிறார்”

இதையும் படிங்க: உங்க பிறந்தநாளில் அதை செய்வீங்கன்னு நம்புறேன்.. விராட் கோலிக்கு இப்போதே வித்யாசமான வாழ்த்து சொன்ன ரிஸ்வான்

“இங்கே பல கேப்டன்களிடம் அந்த திறமை இருப்பதாக தெரியவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் 10 முதல் 40 வரையிலான ஓவர்கள் தான் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய முக்கியமான தருணங்களாகும். எனவே அதில் ஆக்ரோஷமாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதை ரோகித் சர்மா அறிவார்” என்று கூறினார். அந்த வகையில் தற்போது 36 வயதாகும் ரோஹித் சர்மா தன்னுடைய இந்த கடைசி முயற்சியில் உலகக்கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement