ரோஹித்துக்கு பின் இந்திய அணியின் வருங்கால கேப்டன் இந்த 3 பேரில் ஓருவர்தான் – இந்திய நிர்வாகம் முடிவு

rohith
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாட உள்ளது. வரும் பிப்ரவரி 24ஆம் தேதி துவங்கும் இந்த சுற்றுப் பயணத்தில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் பிப்ரவரி 24, 26, 27 ஆகிய தேதிகளில் லக்னோ மற்றும் தர்மசாலா ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொஹாலி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக பெங்களூருவில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் வரலாற்றிலேயே முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாட உள்ளன.

IND

- Advertisement -

புதிய இந்தியா:
இந்த கிரிக்கெட் தொடர்களுக்கான 18 பேர் கொண்ட இந்திய அணிகளை நேற்று பிசிசிஐ அறிவித்தது. அதில் சமீபத்தில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலிக்கு பதிலாக இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக அனுபவ வீரர் ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கேப்டனாக பொறுப்பேற்ற அவர் தற்போது 3 வகையான இந்திய கிரிக்கெட்டுக்கும் முழுநேர கேப்டனாக செயல்பட உள்ளார்.

இதை அடுத்து விரைவில் துவங்க உள்ள இலங்கை தொடரிலிருந்து ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி புதிய சகாப்தத்தைத் துவங்க உள்ளது. கடந்த 2017 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்ட போதிலும் ஒரு உலகக் கோப்பையை வெற்றி பெற முடியவில்லை. எனவே ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ள ரோகித் சர்மா இந்தியாவிற்காக ஒரு ஐசிசி உலகக்கோப்பையை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Rohith-2

அடுத்த கேப்டன் யார்:
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் எம்எஸ் தோனிக்கு பின் கடந்த 2014 முதல் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி பொறுப்பேற்போது 7வது இடத்தில் இருந்த இந்தியாவை அதன்பின் தொடர்ந்து 5 ஆண்டுகளாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக வலம் வர வைத்த பெருமைக்குரியவர். குறிப்பாக அவர் தலைமையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இந்தியா பல சரித்திர வெற்றிகளைப் பெற்றது. அதேபோல் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் கூட உலக கோப்பையை தவிர ஏனைய தொடர்களில் அவர் தலைமையில் இந்தியா சக்கை போடு போட்டது.

- Advertisement -

அப்படிப்பட்ட அவர் திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளதால் அந்த இடத்தை திடீரென நிரப்பும் அளவுக்கு இந்திய அணியில் கேப்டன்ஷிப் அனுபவம் உள்ள இளம் வீரர்கள் யாரும் இல்லை. எனவே தற்போதைய நிலைமையை சமாளிக்க விராட் கோலிக்கு பின் ஒரு மிகச்சிறந்த கேப்டனாக கருதப்படும் ரோகித் சர்மா இந்தியாவின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் 34 வயதை கடந்துவிட்ட அவரால் அடுத்த 2 – 4 ஆண்டுகளுக்கு மட்டுமே கேப்டனாக இருக்க முடியும் என்பதால் இந்தியாவிற்கு ஒரு நீண்ட காலம் விளையாடக் கூடிய ஒரு இளம் கேப்டனை கண்டறிய வேண்டிய முக்கியமான பொறுப்பு இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

Rohith

3 இளம் கேப்டன்கள்:
இந்நிலையில் வருங்காலத்தில் இந்தியாவின் கேப்டன் யாராக இருப்பார்கள் என்ற கேள்விக்கு இந்திய தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா பதிலளித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் போன்ற ஒரு மிகப் பெரிய அனுபவம் நிறைந்த வீரர் கேப்டன்ஷிப் செய்ய முன்வந்ததால் தேர்வு குழுவினருக்கு அனைத்தையும் செய்ய வாய்ப்பு தாமாகவே கிடைத்துள்ளது. எனவே அவர் தலைமையில் புதிய கேப்டனை வளர்ப்பதற்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் மற்றும் இந்தியாவுக்காக இதுவரை கேப்டன்ஷிப் செய்து அதில் அபாரமாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா தலைமையில் விரைவில் இந்தியாவின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைக்கக்கூடிய புதிய கேப்டனை வளர்க்க இருப்பதாக தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா தெரிவித்துள்ளார். அவரை போன்ற ஒரு அனுபவம் நிறைந்த கேப்டன் தலைமையில் விளையாடும் ஒருசில இந்திய வீரர்கள் அவரிடம் இருந்து இந்தியாவிற்கு தலைமை தாங்கக்கூடிய பண்புகளை எளிதாக கற்றுக் கொள்ளலாம் என்பதால் இந்திய தேர்வு குழுவினரின் வேலை மிக சுலபமாக முடிந்துவிடும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Rahul

3 இளம் கேப்டன்கள்:
இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “தென்ஆப்பிரிக்காவில் நாங்கள் கே.எல் ராகுலை கேப்டனாக நியமித்தோம். அப்போது துணை கேப்டனாக இருந்த ஜஸ்பிரித் பும்ரா விரைவில் துவங்க இருக்கும் இலங்கை தொடரிலும் துணை கேப்டனாக செயல்பட உள்ளார். மேலும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பண்ட் துணை கேப்டனாக செயல்பட்டார். எனவே இந்த 3 வீரர்களும் ரோகித் சர்மா தலைமையின் கீழ் கேப்டன்களாக வளர்க்க படுவார்கள்.

- Advertisement -

இருப்பினும் இதில் யார் அடுத்த கேப்டன் எனக் கூறுவது கடினமான ஒன்று என்றாலும் இவர்களில் இருந்து யாரேனும் ஒருவர் விரைவில் ஒரு நல்ல கேப்டனாக உருவாகுவார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். அவர் கூறுவது போல இந்தியாவின் அடுத்த கேப்டனை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஏற்கனவே கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை துணை கேப்டன்களாக நியமனம் செய்து சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் இந்த 3 வீரர்களும் வரும் காலங்களில் கேப்டன்சிப் பற்றி கற்றுக் கொண்டு இந்தியாவின் கேப்டன்களாக உருவெடுப்பார் என சேட்டன் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : நாங்க சொல்ற பேச்சை அவர் கேக்குறதே கிடையாது. அவருக்கு அணியில் இடமில்லை – சேத்தன் சர்மா விளாசல்

இந்த 3 பேரில் ரிஷப் பண்ட் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக கேப்டன்ஷிப் செய்த அனுபவத்தை கொண்டுள்ளார். அவரைப்போலவே பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடந்த சீசனில் கேப்டன்ஷிப் செய்த கேஎல் ராகுல் இந்த வருடம் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்காக புதிய கேப்டனாக செயல்பட உள்ளார். ஜஸ்பிரித் பும்ராவும் நீண்ட காலமாக ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். எனவே அடுத்த 2 ஆண்டுகளில் இந்த மூவரில் யாரேனும் ஒருவர் இந்தியாவின் புதிய கேப்டனாக உருவாவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது என்று நம்பலாம்.

Advertisement