சென்னை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சேப்பாக்கம். போட்டி நடைபெறுமா ? – ரசிகர்கள் ஆதங்கம்

- Advertisement -

கடந்த 2011ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக மூன்று கேலரிகள் கட்டப்பட்டது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு அதிக வருவாய் ஈட்டுவதற்கான இந்த கேலரியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கட்டியது. மொத்தம் 12,000 இருக்கைகள் அதிகப்படுத்தி விரிவுபடுத்தப்பட்டது.

Chepauk 1

- Advertisement -

ஆனால் மாநகராட்சி அதிகாரிகளிடம் சரியான அனுமதி தராமல் சரியான பாதுகாப்பு இன்றி இந்த கேலரிகள் கட்டப்பட்டதால் மாநகராட்சி அதிகாரிகள் அவற்றிற்கு சீல் வைத்தனர்.எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சீல் வைக்கப்பட்டது .

இதனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 8 ஆண்டுகளாக நடைபெற்ற தற்போது முடிவுக்கு வந்துள்ளது.மேலும் மாநகராட்சி அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பெயரில் மீண்டும் மறுசீரமைப்பு செய்து கட்டுமாறு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது .

Chepauk

அதன்படி மறு சீரமைப்பு செய்யப்பட்டு புதிய கட்டப்பட்டன. பின்னர் தற்போது மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். இதன் காரணமாக மூன்று கேலரிகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது . தற்போது சென்னை அணி ஆடும் போது அரங்கம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்து இருப்பார்கள் என்று எதிரார்க்கப்பட்டது.

- Advertisement -

i,j,k ஆகிய மூன்று கேலரிகளும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க சிறப்பான முறையில் தயாராகி தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐ.பி.எல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதனால் இந்த கேலரிகள் திறந்தால் என்ன ? திறக்காமல் இருந்தால் என்ன ? போட்டி நடைபெறுமா ? என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement