ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற 8வது லீக் போட்டியில் சென்னை அணியை பெங்களூரு 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 197 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ரஜத் படிதார் 51 ரன்கள் எடுத்த நிலையில் சென்னைக்கு அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் விளையாடிய சென்னை ஆரம்பம் முதலே தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 146/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41, தோனி 30* ரன்கள் எடுத்தனர். பெங்களூரு அணிக்கு ஜோஸ் ஹேசல்வுட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.
கலாய்த்த வீரர்:
இதனால் 2008க்குப்பின் வருடங்கள் கழித்து சென்னையை அதன் கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் தோற்கடித்து பெங்களூரு அசத்தியது. முன்னதாக இந்தப் போட்டி துவங்குவதற்கு முன்பாக சென்னை என்று கேட்டதும் உங்களுடைய மனதில் என்ன தோன்றும் என ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு “தோசை இட்லி, சாம்பார், சட்னி சட்னி” என்று சிரித்துக் கொண்டே தமிழக மக்களை கலாய்க்கும் வகையில் அவர் பதிலளித்தார்.
அதாவது சென்னை மற்றும் தமிழக மக்கள் பெரும்பாலும் இட்லி, தோசை உணவுகளை அதிகமாக விரும்பி உண்பது வழக்கமாகும். குறிப்பாக காலை, இரவு வேளைகளில் அந்த உணவுகளை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிடுவார்கள். இதுவே பஞ்சாப் போன்ற வட மாநிலங்களில் சப்பாத்தி போன்ற கோதுமை உணவுகள் விருப்பமானதாக அறியப்படுகிறது.
டிஜே பதிலடி:
அப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக மக்களைக் கிண்டல் செய்யும் வகையில் “இட்லி சாம்பார் சட்னி” என்று பாடிக்கொண்டே சொன்ன ஜீதேஷ் சர்மா கலாய்க்கும் வகையில் பேசினார். அதை ஆர்சிபி அணி நிர்வாகம் தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து சென்னை அணியை கிண்டலடித்தது. அது சிஎஸ்கே மற்றும் தமிழக ரசிகர்களிடம் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: யார்கிட்டயும் தைரியம் இல்லை.. தோனி வந்து ஏன்னு சொல்லணும்.. சிஎஸ்கே ரசிகர்கள் மூடர்களா? திவாரி விமர்சனம்
அந்த நிலையில் இந்தப் போட்டியில் ஜித்தேஷ் சர்மா 12 ரன்னில் அவுட்டாகி செல்லும் போது “தோசா, இட்லி, சாம்பார், சட்னி” என்ற பாடலின் வைரல் வரிகளை சேப்பாக்கம் மைதானத்தின் டிஜே ஒலிபரப்பினார். அதைக் கேட்டு சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் வெறித்தனமாக கூச்சலிட்டு ஜித்தேஷ் சர்மாவை அனுப்பி வைத்தனர். அந்த வகையில் தமிழக மக்களை கிண்டலடித்த ஆர்சிபி வீரருக்கு சேப்பாக்கம் மைதானத்தின் டிஜே பதிலடிக் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.



