4 ஓவரில் 4 விக்கெட்ஸ்.. அசத்திய சேப்பாக் கில்லீஸ்.. எளிதான வெற்றியை தாரை வார்த்த திருச்சி.. பிளே ஆஃப்க்கு போட்டி

TNPL 21
- Advertisement -

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஜூலை 22ஆம் தேதி திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் கம்பெனி மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு 21வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருச்சி சோழாஸ் அணிகள் மோதின.

அதில் டாஸ் வென்ற திருச்சி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் ஆரம்பத்திலேயே சுமாராக பந்து வீசிய அணி பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட சேப்பாக் துவக்க வீரர்கள் 105 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார துவக்கத்தை கொடுத்தனர். அதில் சந்தோஷ் குமார் அரை சதமடித்து 56 (38) ரன்களும் ஜெகதீசன் 51 (40) ரன்களும் குவித்து அவுட்டானார்கள்.

- Advertisement -

சேப்பாக் வெற்றி:
அதே போல மிடில் ஆர்டரில் பெராரியோ அதிரடியாக 30 (15), பிரதோஷ்பால் 29 (14), அபிஷேக் தன்வர் சரவெடியாக 26* (8) ரன்கள் எடுத்து ஃபினிஷிங் செய்தனர். அதனால் 20 ஓவரில் சேப்பாக்கம் 198/4 ரன்கள் எடுத்த நிலையில் திருச்சி சார்பில் அதிகபட்சமாக ராஜ்குமார் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 199 ரன்களை துரத்திய திருச்சிக்கு வசீம் அகமது அதிரடியாக விளையாடினார்.

அதனால் 3.4 ஓவரில் 38/0 என்ற ஓரளவு நல்ல தூக்கத்தை பெற்ற அந்த அணிக்கு எதிர்புறம் தடுமாறிய துவக்க வீரர் ராஜ்குமார் 14 ரன்னில் அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த சியாம் சுந்தர் 9, சஞ்சய் யாதவ் 1, அர்ஜுன் மூர்த்தி 5 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை உண்டாக்கினர். அந்த வகையில் குறுகிய இடைவெளியில் 4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 7.4 ஓவரில் 67/4 என சரிந்தது.

- Advertisement -

அப்போது மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வாசிம் அகமது முடிந்தளவுக்கு போராடி 48 (38) ரன்கள் குவித்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் ராஜ்குமார் மற்றும் ஜாபர் ஜமால் ஆகியோர் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினர். ஆனாலும் ரன் ரேட் அதிகரித்த சூழ்நிலையில் ராஜ்குமார் 39 (18) ரன்களில் முக்கிய நேரத்தில் அவுட்டாகி சென்றார்.

இறுதியில் மறுபுறம் ஜாஃபர் ஜமால் அதிரடியாக 52* (34) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 184/7 ரன்கள் மட்டுமே எடுத்த திருச்சி 14 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. ஒருவேளை அந்த 4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழக்காமல் போயிருந்தால் திருச்சி வென்றிருக்கும் என்றே சொல்லலாம். மறுபுறம் சிறப்பாக பந்து வீசி வெற்றி கண்ட சேப்பாக்கம் சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் கிறிஸ்த் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இதையும் படிங்க: முரட்டு சிக்ஸரால் ரசிகை காயம்.. பிளே ஆஃப் அழைத்த சென்ற பொல்லார்ட்.. செய்த நெகிழ்ச்சி சம்பவம்

இதையும் சேர்த்து 6 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்த சேப்பாக் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 3வது தோல்வியை சந்தித்த திருச்சி 3வது இடத்திற்கு சரிந்துள்ளது.

Advertisement