ஐபிஎல் 2024 ஏலம் முடிவு : 6வது கோப்பை வெல்லுமா தோனியின் படை.. புதிய சிஎஸ்கே அணி இதோ

CSK 2024
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெற்றது. அதில் 10 அணிகளில் காலியாக இருந்த 77 இடங்களுக்கு 333 வீரர்கள் போட்டியிட்டார்கள். இந்த ஏலத்தில் எம்எஸ் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 2023 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகளிலும் சதமடித்து சிறப்பாக விளையாடிய நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் டார்ல் மிட்சேலை 14 கோடிக்கு வாங்கியது.

அதே போல அறிமுக உலகக் கோப்பையிலேயே அதிக ரன்கள் (523) அடித்த வீரராக உலக சாதனை படைத்த இளம் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவையும் 1.80 கோடி என்ற குறைந்த விலைக்கு சென்னை வாங்கியது. மேலும் வங்கதேசத்தைச் சேர்ந்த முதன்மை வேகப்பந்து வீச்சாளர் முஸ்ஃதபிசுர் ரஹ்மானை 2 கோடிக்கு வாங்கிய சென்னை மொத்தமாக 3 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே வாங்கியது.

- Advertisement -

2024 சென்னை அணி:
மற்ற படி 2018, 2021 ஆகிய வருடங்களில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய இந்திய வீரர் ஷர்துல் தாக்கூரை மீண்டும் 4 கோடிக்கு சென்னை வாங்கியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அதை விட சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகாத உத்திரபிரதேசத்தை சேர்ந்த 20 வயது இளம் வீரர் அமீர் ரிஸ்வியை 8.4 கோடி என்ற பெரிய தொகைக்கு சென்னை வாங்கியது ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் 9 இன்னிங்ஸில் 295 ரன்களை எடுத்துள்ள அவர் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் திறமையை காண்பித்துள்ளதால் இவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டுள்ளார். இறுதியாக அவினாஷ் ராவ் எனும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இளம் இந்திய வீரரை அடிப்படை விளையான 20 லட்சத்திற்கு சென்னை கடைசி நேரத்தில் வாங்கியது.

- Advertisement -

அந்த வகையில் மொத்தம் 31.4 கோடிகளுடன் இந்த ஏலத்தில் களமிறங்கிய சென்னை தங்களது அணியில் காலியாக இருந்த 6 வீரர்களின் இடத்தையும் 30.4 கோடிகள் செலவில் வாங்கி ஒரு கோடியை மீதம் வைத்துள்ளது. குறிப்பாக ஓய்வு பெற்ற ராயுடு மற்றும் விடுவிக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் இடத்தை நிரப்பும் அளவுக்கு டார்ல் மிட்சேலை வாங்கிய சென்னை வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரவீந்திரா, ரிஸ்வி போன்ற இளம் வீரர்களையும் வாங்கியுள்ளது.

இதையும் படிங்க: 2016இல் வாங்குன அடிய மறக்காதீங்க.. 2 கோடிக்கு வாங்கிய தரமான ரஹ்மானை.. அடிதடியுடன் வரவேற்ற சிஎஸ்கே

மொத்தத்தில் ஐபிஎல் 2024 தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதோ: எம்எஸ் தோனி (கேப்டன்), அஜய் மண்டல், அஜிங்கிய ரகானே, தீபக் சஹர், டேவோன் கான்வே, மஹீஸ் தீக்சனா, மதிஷா பதிரனா, மிட்சேல் சான்ட்னர், மொய்ன் அலி, முகேஷ் சௌத்ரி, நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கைக்வாட், சாய்க் ரசித், சிவம் துபே, சிமர்ஜித் சிங், துஷார் தேஷ்பாண்டே, டார்ல் மிட்சேல்*, ரச்சின் ரவீந்தரா*, முஸ்தபிசுர் ரஹ்மான்*, சர்துல் தாக்கூர்*, அமீர் ரிஸ்வி*, அவினாஷ் ராவ்*

Advertisement