2016இல் வாங்குன அடிய மறக்காதீங்க.. 2 கோடிக்கு வாங்கிய தரமான ரஹ்மானை.. அடிதடியுடன் வரவேற்ற சிஎஸ்கே

Mushtafizur Rahman
- Advertisement -

துபாயில் டிசம்பர் 14ஆம் தேதி ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான ஏலம் கோலாகலமாக நடைபெற்ற முடிந்தது. அதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிட்சேல் ஸ்டார்க் உச்சகட்டமாக 24.75 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு வாங்கப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் நியூசிலாந்து வீரர் டார்ல் மிட்சேலை 14 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது.

அதே போல இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடி என்ற குறைந்த தொகைக்கு சென்னை வளைத்து போட்டது. இந்த 2 வீரர்களுமே நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையில் இந்திய மைதானங்களில் அபாரமாக விளையாடி பெரிய ரன்கள் குவித்ததால் அவர்களை வாங்கிய சென்னை நிர்வாகத்தின் முடிவை ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர்.

- Advertisement -

அடிய மறக்காதீங்க:
அவர்களை தொடர்ந்து சென்னை கடைசியாக வாங்கிய வெளிநாட்டு வீரராக வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தஃபிசுர் ரஹ்மான் அமைந்தார். கடந்த 2016இல் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே வங்கதேச அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்த அவர் நல்ல லென்த், லென்த் போன்றவற்றை பின்பற்றி விவேகமாக செயல்படக் கூடியவராக அறியப்படுகிறார்.

மேலும் 2016ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி மிகச் சிறப்பாக விளையாடிய அவர் வளர்ந்து வரும் வீரர் என்ற விருதையும் வென்றார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் எமர்ஜிங் பிளேயர் எனப்படும் வளர்ந்து வரும் வீரர் விருதை வென்ற ஒரே வெளிநாட்டு வீரராக ரஹ்மான் இப்போதும் தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் திறமை வாய்ந்த அவர் சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடிய சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக செயல்படுவார் என்று சென்னை ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் 2 கோடிக்கு வாங்கிய முஸ்தபிசுர் ரஹ்மானை 2016 ஆசிய கோப்பையில் தோனியுடன் ஏற்பட்ட மோதலை வீடியோவாக பதிவிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அடிதடியான வரவேற்பு கொடுத்துள்ளது. அதாவது 2016 ஆசிய கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் ரோகித் சர்மா ரன் எடுக்க ஓடும் போது ரஹ்மான் குறுக்கே சென்று தொல்லை கொடுத்தார்.

அதனால் கோபமடைந்த ரோகித் சர்மா எச்சரித்த நிலையில் அதற்கடுத்த பந்தை எதிர்கொண்ட தோனி ரன் எடுக்க ஓடும் போது மீண்டும் குறுக்கே வந்த ரஹ்மானை விதமான எச்சரிக்கையும் இல்லாமல் நேரடியாக தன்னுடைய தோளில் மோதி தள்ளி “என்னுடைய அணி வீரரிடம் வைத்துக் கொள்ளாதே” என்ற வகையில் மாஸ் பதிலடி கொடுத்தார். ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாத அந்த நிகழ்வை “மோதல் டூ கூட்டணி” என்ற தலைப்புடன் தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ள சிஎஸ்கே ரஹ்மானை அதிரடியாக வரவேற்றுள்ளது வைரலாகி வருகிறது.

Advertisement