இந்தியா முழுவதும் கேட்காததை கேட்டு கருணை காட்டிய சென்னை ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்

Kohli

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு. செய்தது அதன்படி தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

Cup

அப்படி முதலில் விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 6 ரன்களில் வெளியேற ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் ஆவது பெரியபாட்னர்ஷிப் அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பந்துகளில் 4 ரன்கள் அடித்த நிலையில் கோலி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

அதன் பின்னர் ஸ்ரேயாஸ் அய்யர் உடன் கை கோர்த்தது ரோகித் ஓரளவுக்கு சரிவிலிருந்து மீட்டாலும் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் அவுட்டாகி வெளியேற அடுத்து இளம் வீரரான பண்ட் களமிறங்கினார். வந்ததிலிருந்து இருவரும் சிறப்பாக விளையாட துவங்கிய இவர்கள் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர். இந்நிலையில் 88 பந்துகளில் 70 ரன்கள் குவித்து வெளியேற பண்ட் தற்போது ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

Pant 1

கடந்த பல தொடர்களாகவே பேட்டிங்கில் சொதப்பிய பண்ட் ரசிகர்களிடையே அதிகம் விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் பண்ட் இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே கடந்த தொடரின்போது அவரை யாரும் மைதானத்தில் சிறப்பாக ஆடவில்லை என்றால் விமர்சனங்களை கூறி மைதானத்தில் கத்த வேண்டாம் மேலும் தோனியின் பெயரை கூற வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையை வேண்டுகோளாக வைத்திருந்தார்.

- Advertisement -

Pant

ஆனால் இந்தியாவில் எந்த மைதானத்தில் போட்டி நடந்தாலும் பண்டை ண்டிற்கு ஆதரவாக பேனர் பிடித்து அவரை உற்சாகப்படுத்தி வருவது தற்போது புகைப்படமாக இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.