- Advertisement -
ஐ.பி.எல்

அஷ்வினை வெளியேற்றினாலும் அது சி.எஸ்.கே அணிக்கு நல்லது தான்.. காரணத்தை கூறிய – சீக்கா ஸ்ரீகாந்த்

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அவர் மீது சில விமர்சனங்கள் இருந்து வருகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தின் போது 9 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட அஸ்வின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

அஷ்வின் வெளியேறினால் நல்லது தான் : சீக்கா ஸ்ரீகாந்த்

ஆனால் தற்போது 38 வயதை எட்டியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால் அவரது முழு திறன் தற்போது வெளிப்படவில்லை. எனவே அவர் சில போட்டிகளில் பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் வெளியிலும் அமர வைக்கப்பட்டார்.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு தான் சென்னை அணிக்காக விளையாட போவதில்லை என்றும் சென்னை அணியில் இருந்து வெளியேற விரும்புவதாகவும் அஷ்வின் நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்ததாக சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதன் காரணமாக அஸ்வின் வெளியேற்றம் குறித்து தற்போது பல்வேறு கருத்துக்கள் பலரது மத்தியிலும் இருந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழக கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய கேப்டனுமான ஸ்ரீகாந்த் அஸ்வின் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறினால் இளம் வீரர்களை வைத்து புதிய அணியை உருவாக்க நல்ல வாய்ப்பாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

சிஎஸ்கே அணியில் இருந்து அஸ்வின் வெளியேறினால் அது ஒரு நல்ல முடிவுதான். ஏனெனில் இளம் வீரர்களை வைத்து எதிர்கால அணியை பலப்படுத்த வேண்டுமென்றால் இது போன்ற ஒரு முக்கிய முடிவுகளை எடுத்துத்தான் ஆக வேண்டும். அஷ்வின் இந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் மோசமான செயல்பாட்டினை வெளிப்படுத்தி ஏமாற்றம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : 21 டக் அவுட்.. கெளதம் கம்பீர் கொடுத்த அந்த வாக்குறுதியே ஒருவழியா என்னோட சதங்களுக்கு காரணம்.. சாம்சன் பேட்டி

அவர் இந்திய அணிக்காகவும், சிஎஸ்கே அணிக்காகவும், தமிழ்நாடு அணிக்காகவும் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால் கடைசி இரண்டு ஆண்டுகளாக சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. எனவே அதற்கு ஏற்றார் போல் சென்னை அணியில் மாற்றங்கள் நிகழும் பட்சத்தில் அஸ்வின் வெளியேறினாலும் அது தவறு கிடையாது என ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -