ஆசிய கோப்பை தொடரில் தடுமாறி வரும் சுப்மன் கில் இதை செய்தே ஆகனும்.. சீக்கா அட்வைஸ் – விவரம் இதோ

Cheeka and Gill
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக விளையாடி வரும் அவரது பேட்டிங் ஃபார்ம் இந்த ஆசிய கோப்பை தொடரில் மோசமாக இருந்து வருகிறது. இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அணிக்கு எதிராக 20 ரன்களை ஆட்டமிழக்காமல் அடித்திருந்தார்.

சுப்மன் கில்லுக்கு ஆலோசனை வழங்கிய சீக்கா :

ஆனால் அதற்கடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெறும் 10 ரன்களையும், ஓமன் அணிக்கு எதிராக 5 ரன்களை மட்டுமே குவித்தார். இதன் மூலம் இந்த தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 35 ரன்களை மட்டுமே அடித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே துவக்க வீரருக்கான இடத்தில் சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு சுப்மன் கில்லை கொண்டு வந்த நிலையில் அவரது இந்த மோசமான ஆட்டம் பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் சுப்மன் கில் தான் இந்த தொடரில் தொடர்ச்சியாக துவக்க வீரராக விளையாடுவார் என்று தெரிகிறது. இந்திய அணியானது அடுத்ததாக செப்டம்பர் 21-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் போர் சுற்றில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் துணை கேப்டனான சுப்மன் கில் மீண்டும் ஃபார்முக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து முன்னாள் இந்திய வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : தற்போது சுப்மன் கில் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டிய வேண்டியது அவசியம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலேயே அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்தேன்.

- Advertisement -

ஆனால் அந்த போட்டியில் அவர் 10 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் அவர் எதிர்கால நிரந்தர கேப்டனாகவும் பார்க்கப்படுகிறார். அவர் இப்படி தொடர்ச்சியாக சரிவை சந்தித்தால் அது நிச்சயம் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும். என்னை பொருத்தவரை மீண்டும் சுப்மன் கில் பார்முக்கு திரும்ப வேண்டுமெனில் :

இதையும் படிங்க : 10 ஆவது இந்திய வீரராக டி20 போட்டிகளில் அசத்தல் சாதனையை நிகழ்த்திய சஞ்சு சாம்சன் – விவரம் இதோ

போட்டியின் ஆரம்பத்திலேயே கவர் டிரைவ் விளையாடுவதை தவிர்த்து பந்தினை நேராக அடித்து விளையாட வேண்டும். பின்னர் அவர் செட்டாகும் வரை கவர் டிரைவுக்கு செல்லக்கூடாது. முதலில் பந்துகளை ஸ்ட்ரைட் டிரைவ் ஆடி ரன்களை குவித்து பின்னர் நன்றாக செட்டான பின்னர் அவரது விருப்பப்படி விளையாடலாம் என சுப்மன் கில்லுக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அறிவுரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement