- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா மட்டுமல்ல அவங்களையும் வீழ்த்தி.. 2025 மகளிர் உ.கோ வெல்வோம்.. இங்கிலாந்து கோச் பேட்டி

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதி துவங்கும் அத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் டாப் அணிகள் களமிறங்குகின்றன. அந்த அணிகளுக்கு சவாலைக் கொடுத்து சொந்த மண்ணில் இந்திய மகளிரணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

சொல்லப்போனால் இதுவரை மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மட்டுமே உலகக் கோப்பைகளை வென்றுள்ளன. இந்திய மகளிர் அணி ஒரு முறை கூட வரலாற்றில் உலகக் கோப்பை வென்றதில்லை. எனவே சொந்த மண்ணில் நிலவும் சூழ்நிலைகள் பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய மகளிரணி கோப்பையை வெல்லத் தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்தியாவை வீழ்த்துவோம்:

அந்த சூழ்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் இந்திய மகளிரணி 2 – 1 (3) என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் தோற்கடித்தது. அத்துடன் டி20 தொடரிலும் 3 – 2 (5) என்ற கணக்கில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய அணி நல்ல ஃபார்மில் இருக்கிறது. எனவே 2011 உலகக் கோப்பையை ஆடவர் அணி சொந்த மண்ணில் வென்றது போல இந்திய மகளிர் அணியும் சாம்பியன் பட்டம் வெல்லத் தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடித்து உலகக் கோப்பையை நாங்கள் வெல்வோம் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் சார்லல் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து கோப்பையை வெல்லும் திறமை தங்களிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

இங்கிலாந்து வெல்லும்:

“எங்களுடைய ஊரில் இந்தியா மிகப்பெரிய சவாலைக் கொடுத்தார்கள். அது போன்ற சவாலை கொண்ட மகளிர் கிரிக்கெட்டையே நாங்களும் விளையாட விரும்புகிறோம். அந்த தோல்வி எங்களுடைய உண்மை நிலையை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடையாது. ஏனெனில் எங்களால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்”

இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு.. காரணம் என்ன? – விவரம் இதோ

“எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும் என்ற நிலைப்பாட்டுடன் உலகக்கோப்பையில் விளையாட செல்கிறோம். வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்காக நாங்கள் ஃபீல்டிங் துறையில் முன்னேறுவதற்கான வேலைகளை செய்து வருகிறோம். சில நேரங்களில் ஒரு சில கேட்ச்கள் தவற விட்டால் எங்களை மோசமான ஃபீல்டிங் அணி என முத்திரை குத்துகின்றனர். எனவே சிறந்த ஃபீல்டிங் அணி என்று எங்களை பேசும் இடத்தை நாங்கள் எட்டுவோம்” என்று கூறினார்.

- Advertisement -