56 – 57 வீரர்களை மாற்றியும் எதுவும் சாதிக்கல, டி20 உ.கோ’யில் இந்திய அணிக்கு தோல்வி காத்திருக்கு – முன்னாள் பாக் வீரர் ஓப்பன்டாக்

IND vs PAk Rahul Hardik Pandya
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இந்த தொடரில் 2007க்குப்பின் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் 15 வருட கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இந்தியா களமிறங்குகிறது. அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களையும் வென்ற இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்றுப் பின்னடைவை சந்தித்தது.

Team India

- Advertisement -

அதனால் இங்கேயே கோப்பையை வெல்ல முடியாத இந்திய அணி ஆஸ்திரேலியாவில் எங்கே கோப்பையை வெல்லப் போகிறது என்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் யானைக்கும் அடி சறுக்கியதை போல் சந்தித்த அந்த தோல்வியில் துவளாமல் அடுத்ததாக சொந்த மண்ணில் டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா தென்ஆப்பிரிக்காவை வரலாற்றில் முதல் முறையாக தோற்கடித்து அடுத்தடுத்த வெற்றிகளுடன் உலக கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுள்ளது. அங்கு சில பயிற்சி போட்டிகளில் பங்கேற்கும் இந்தியா வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரியான பாகிஸ்தானை தன்னுடைய முதல் லீக் போட்டியில் எதிர்கொள்கிறது.

ஏராளமான மாற்றங்கள்:
ஆனால் இந்த உலகக் கோப்பையை வெல்லுமா என்பது இப்போதும் இந்திய ரசிகர்களுக்கு 90% கேள்விக் குறியாகவே உள்ளது. ஏனெனில் முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறிய நிலையில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியது இந்தியாவுக்கு முதல் அடியிலேயே சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதைவிட ஏற்கனவே இருக்கும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் சரியாக பயன்படுத்தப் படுவார்களா என்ற கலக்கமும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Rahul Dravid Rohit Sharma Jasprit Bumrah

ஏனெனில் கடந்த உலக கோப்பைக்குப்பின் புதிய கேப்டன் – பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோர் தரமான வீரர்களை கண்டறியும் சோதனை முயற்சி என்ற பெயரில் கடந்த ஒரு வருடமாக வென்றாலும் தோற்றாலும் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு தொடருக்கு பின்பும் மாற்றங்கள் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதிலும் 4 வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த வேண்டிய இடத்தில் உலக கோப்பைக்கு முன்பாக 3 வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி பார்த்தோம் என்று ஆசிய கோப்பை தோல்விக்கு பின் அவர்கள் கூலாக பதிலளித்தது அனைவரையும் கடுப்பாக வைத்தது.

- Advertisement -

அதனால் அது போன்ற மாற்றங்களை இருதரப்பு தொடரில் செய்யுங்கள் ஆசிய கோப்பை, உலக கோப்பை போன்ற தொடரில் செய்யாதீர்கள் என்று மதன் லால் உள்ளிட்ட நிறைய முன்னாள் வீரர்கள் கடுமையாக சாடினார்கள். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக 56 – 57 வீரர்களை மாற்றி மாற்றி சோதித்து பார்த்து வரும் இந்திய அணி நிர்வாகம் அதன் பயனாக இதுவரை ஆசிய கோப்பை போன்ற எந்தவொரு பெரிய தொடரையும் வெல்ல முடியவில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப் விமர்சித்துள்ளார். இது பற்றி பிரபல தொலைக்காட்சியில் அவர் பேசியது.

latif

“இந்தியா அவர்களுடைய முதன்மை வீரர்களை அனைத்து இடங்களிலும் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். மேலும் மொத்த அணியையும் அவர்கள் அடிக்கடி மாற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சொல்லப்போனால் கடந்த ஒரு வருடமாக அவர்கள் 56 – 57 வீரர்களை மாற்றியுள்ளனர். ஆனாலும் அவர்களால் ஒரு பெரிய தொடரை கூட வெல்ல முடியவில்லை. இது அவர்களது அணியில் நிலவும் மிகப்பெரிய பிரச்சனையாகும். மறுபுறம் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் ஆரம்பம் முதலே சரியான திட்டங்களை வகுத்து வருகின்றன. பாகிஸ்தானும் அந்த வழியில் நடக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: உள்ளூரில் கடினமாக உழைத்து நிறைய ரன்கள் அடித்தும் இந்திய அணியில் சான்ஸ் கிடைக்கல – ஸ்டார் இளம் வீரர் சோகமான கருத்து

அதாவது என்னதான் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தாலும் அடிக்கடி வீரர்களை மாற்றுவதை வழக்கமாக வைத்திருக்கும் இந்திய அணியால் உலககோப்பையில் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார். அவர் கூறுவது போல இருதரப்பு தொடர்களை வென்றாலும் ரிஷப் பண்ட்டை நம்பி தினேஷ் கார்த்திக்கை கழற்றி விட்டது போன்ற தேவையற்ற மாற்றங்கள் இந்தியாவுக்கு ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடரில் தோல்வியை பரிசளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement