சாஹர் மற்றும் தோனி செய்ஞ்ச இந்த சின்ன தவறால் போட்டியை இழந்த சி.எஸ்.கே – விவரம் இதோ

Chahar4

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால் இந்த தோல்வி ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே தவிர்க்கப் பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. நேற்று டாஸ் வென்று வழக்கம்போல் பந்து வீச முடிவு செய்தார். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

CSK_VS_DC

இரண்டாவது பந்து வீசும் டெல்லி அணிக்கு பிரச்சனை ஏற்படும் அதனை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று தோனி கணக்கு போட்டார். ஆனால் அது நடைபெறவில்லை முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 175 ரன்கள் விளாசி விட்டது. இதற்கு அந்த அணியின் துவக்க வீரர் பிரித்திவிஷா மிகப் பெரும் காரணமாக அமைந்தார். அவர் 43 பந்தில் 9 பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து மொத்தம் 64 ரன்கள் சேர்த்தார்.

இந்த போட்டியில் முதல் ஓவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் தீபக்சாகர் வீசினார்.இரண்டாவது பந்தில் பிரித்திவிஷா எதிர்கொள்ளும் போது பந்து அவரது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் தோனியிடம் சென்றது தோனி அதனை அழகாக பிடித்து விட்டார்.

ஆனால் பந்து பேட்டில் பட்டதை யாரும் கவனிக்கவில்லை. தீபக்சாகர் கவனிக்கவில்லை தோனியும் கவனிக்கவில்லை. எளிதாக கடந்து சென்று விட்டார்கள். பின்னர் ரீப்ளே வீடியோவில் பார்க்கும் போது இது தெரிந்தது. அப்போது அவரை டக் அவுட் ஆக விக்கெட் எடுத்து இருந்தால் இவ்வளவு ரன்கள் போயிருக்காது.

- Advertisement -

shaw

140 ரங்களுடன் சுருட்டி இருக்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் இதனை கோட்டைவிட்டது, தீபக் சஹர் மற்றும் தோனியும் தவறு செய்து விட்டனர் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பேசி வருகின்றனர்.