இந்த ஊரடங்கு முடிந்தால் 3 வருஷம் வீட்டுக்கே போகமாட்டேன். என்னால முடியல – புலம்பி தள்ளிய இந்திய நட்சத்திர வீரர்

Chahal-1
- Advertisement -

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் தற்போது மார்ச் 29ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு அடுத்தும் இந்த தொடர் நடை பெறுவது சந்தேகம்தான் என்று தெரிகிறது. இந்தியாவில் மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பவே இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டி என்பது கிடையாது என்றே தோன்றுகிறது.

Chahal

- Advertisement -

இந்திய அணி கடைசியாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது. இந்த தொடரில் முதல் போட்டி தர்மசாலாவில் மழை காரணமாக தடைபட்டது. அடுத்த இரு போட்டிகள் துவங்கும் முன்னர் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததை கண்டறிந்த இந்திய அரசாங்கம் உடனடியாக அவரச நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தது.

அதன்காரணமாக மீதமுள்ள 2 போட்டிகளையும் ரத்து செய்து தென்னாபிரிக்க தொடரை கைவிடுவதாக பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன்பிறகு தென்னாபிரிக்க வீரர்களையும் கொல்கத்தா வழியாக துபாய்க்கு அனுப்பி வைத்து அங்கிருந்து அவர்களது சொந்த நாட்டிற்கு பி.சி.சி.ஐ பத்திரமாக அனுப்பி வைத்தது. இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த முன்னெச்சரிக்கை செயலை தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும் பாராட்டியது.

Chahal

இந்நிலையில் தற்போது இந்த ஓய்வு நேரத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது மற்றும் குடும்பத்தினருடன் டிக் டாக் செய்வது என நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் வீட்டிலேயே முடங்கி இருப்பது தனக்கு மிகவும் சோர்வாக அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும்போது : 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வீட்டிற்குள்ளே இருப்பது எனக்கு மிகவும் சோர்வாக இருக்கிறது. இதனால் என்னால் இதற்கு மேல் வீட்டில் இருக்க முடியாது. தற்போது வீட்டில் இருக்கும் நாட்கள் மூன்று வருடங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

முடிந்தால் அருகில் உள்ள ஹோட்டலில் தங்கிக் கொள்கிறேன். ஆனால் வீட்டிற்கு மட்டும் வரமாட்டேன் என்று புலம்பித் தள்ளி உள்ளார் சாஹல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் இந்த பாதிப்பு இல்லை எனில் தற்போது பெங்களூரு அணிக்காக ஐ.பி.எல் தொடரில் விளையாடி இருப்பேன் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement