தோனி கூறும் இடத்தில் கண்ணை மூடிக்கொண்டு பந்து வீசுவேன் – மெய்சிலிர்க்கும் இந்திய வீரர்

dhoni
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்குபெறும் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 6 முதல் துவங்க உள்ளது. இதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் பிப்ரவரி 6, 9, 12 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெறவுள்ளது.

INDvsWI

- Advertisement -

இந்த தொடரில் இந்தியாவின் நட்சத்திர சுழல் பந்துவீச்சு கூட்டணியான “குல்ச்சா” எனப்படும் குல்தீப் யாதவ் மற்றும் யூஸ்வென்ற சஹால் ஜோடி நீண்ட நாட்களுக்கு பின் ஒன்றாக விளையாட உள்ளது இந்திய ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016 முதல் இந்தியாவின் முன்னணி ஸ்பின் பவுலர்களாக உருவெடுத்த இவர்கள் கடந்த 2019 உலகக்கோப்பைக்கு பின் மோசமான பார்ம் காரணமாக கழட்டிவிடப்பட்டார்கள்.

தோனியும் – குல்ச்சாவும் :
இந்திய அணியில் இந்த ஜோடி அபாரமாக செயல்பட அப்போதைய விக்கெட் கீப்பராக இருந்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஒரு முக்கிய காரணமாக இருந்தார். ஏனெனில் கேப்டனாக ஏகப்பட்ட அனுபவம் கொண்டிருந்த தோனி இவர்கள் மோசமாக பந்து வீசும்போது எந்த இடத்தில் எப்படி பந்து வீச வேண்டும் என அடிக்கடி ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருந்தார். குறிப்பாக ஏதேனும் ஒரு பேட்டர் இவர்கள் பந்துவீச்சை சரமாரியாக அடித்தால் உடனே விக்கெட் கீப்பரான தோனி அவர்களின் அருகே சென்று எப்படி பந்து வீச வேண்டும் என கூறியதை பலமுறை பார்த்துள்ளோம்.

chahal

இருப்பினும் கடந்த 2019 உலக கோப்பையுடன் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி ஓய்வு பெற்றதால் அவரின் இடத்தில் இருந்து சரியான ஆலோசனை வழங்க யாரும் இல்லாத காரணத்தால் மோசமாக பந்துவீச துவங்கிய இந்த ஜோடி அதன்பின் இந்திய அணியில் தொடர்ச்சியாக ஒன்றாக விளையாடும் வாய்ப்பை இழந்து தடுமாறுகிறது.

- Advertisement -

தோனியின் ஆதரவு :
இந்நிலையில் தோனி அளித்த விலைமதிப்பில்லா ஆதரவு பற்றி யூஸ்வென்ற சஹால் மனம் திறந்து பேசியது பின்வருமாறு. “தென்ஆப்பிரிக்காவில் நடந்த ஒரு டி20 போட்டியில் நான் 64 ரன்களை வாரி வழங்கினேன். குறிப்பாக தென்னாபிரிக்க வீரர் ஹென்றிச் க்ளாசீன் என்னை மைதானத்தின் அனைத்து இடங்களிலும் சரமாரியாக விளாசினார். அப்போது தோனி என்னிடம் வந்து அரௌண்ட் தி விக்கெட் திசையிலிருந்து பந்துவீசுமாறு கூறினார். நான் அவ்வாறு வீசியபோது மீண்டும் அவர் எனது பந்தை சிக்ஸர் பறக்க விட்டார்.

chahal

அப்போது மீண்டும் என் அருகே வந்த தோனியிடம் “இப்போது நான் என்ன செய்ய வேண்டும்” என கேட்டேன். அதற்கு அவர் “ஒன்றுமில்லை உன்னை பார்ப்பதற்காக வந்தேன். இது உன்னுடைய நாள் இல்லை. சிறப்பாக இருக்க நீ முயற்சி செய்கிறார் ஆனால் அது நடக்கவில்லை. எனவே அதைப்பற்றி கவலைப்படாமல் உனது 4 ஓவர்களை வீசி முடி” என கூறி ஆதரவு வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் மேலும் பேசுகையில் “அது போன்ற நேரங்களில் ஒருவர் உங்களை திட்டினால் அது உங்களின் தன்னம்பிக்கை குறைய செய்துவிடும். ஆனால் தோனி “நீ ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டாய். அதேபோல எல்லா போட்டிகளிலும் செயல்பட முடியாது. இந்தப் போட்டியில் மற்றவர்களும் விளையாடுகிறார்கள்” எனக்கூறி ஆதரவு அளித்தார். அப்போது தான் சில நேரங்களில் நம்மால் சிறப்பாக செயல் முடியும் சில நேரங்களில் சிறப்பாக செயல்பட முடியாது சில நாட்கள் நமக்கு சாதகமாக அமையாது என்பதை புரிந்து கொண்டேன். மேலும் அந்த நாள் நமக்கானது இல்லை என தெரியும் போது ஓரளவு சிறப்பாக பந்துவீசிவிட்டு மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென உணர்ந்து கொண்டேன்” என சஹால் தெரிவித்துள்ளார்.

Chahal

கண்ணை மூடிக்கொண்டு :
கடந்த 2016ஆம் ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் இந்திய கிரிக்கெட்டில் முதல் முறையாக காலடி வைத்து சஹால் பின்னர் விராட் கோலி தலைமையில் பெரும்பாலான போட்டிகளில் விளையாடினார். ஆனாலும் தோனியின் பேச்சை கேட்டு தான் பெரும்பாலான போட்டிகளில் அவர் பந்து வீசினார்.

இதையும் படிங்க : ஐபிஎல் என் வாழ்க்கையையே மாற்றி விட்டது – நெகிழும் ஆஸ்திரேலிய ஸ்டார் வீரர்

இது பற்றி சஹால் கூறுயது பின்வருமாறு. “நான் தோனியை கண்ணை மூடிக்கொண்டு நம்புவேன். ஏனெனில் அணியில் அவர் இருந்தால் நாம் பந்துவீச வருவதற்கு முன்பாகவே 50% வேலை முடிந்துவிடும். எவ்வளவு வேகத்தில் பந்து வீச வேண்டும், எங்கு வீச வேண்டும், எந்த லைன், எப்படி பீல்ட் செட் செய்வது போன்ற பல்வேறு விதமான தகவல்களை நமக்கு அவர் தெரிவிப்பார்” என பெருமையுடன் கூறியுள்ள அவர் தற்போதைய இந்திய அணியில் எம்எஸ் தோனியை மிகவும் மிஸ் செய்வதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Advertisement