இன்றைய போட்டியில் இந்திய அணி ஜெயிக்கணும்னா இவர் நிச்சயம் அணியில் இருக்கனும் – விவரம் இதோ

IND

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Pant 2

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியும், போட்டியை வென்று தொடரை சமன் செய்ய இந்திய அணியும் கடும் சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் பேட்டிங்கில் மாற்றம் எதுவும் செய்யவேண்டாம் ஏனெனில் ரோஹித், ராகுல், கோலி மற்றும் ஐயர் என பேட்டிங் ஆர்டர் பலமாகவே உள்ளது. ஆனால் முதல் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க தடுமாறியதை நாம் பார்த்தோம். அது மட்டுமின்றி மிடில் ஓவர்களில் பந்து வீசும் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை.

எனவே இன்றைய இந்திய அணியில் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசும் சாஹலை அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. ஏனெனில் சாஹல் அணிக்கு தேவைப்படும் நேரத்தில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் உடையவர் என்பதால் இன்றைய போட்டியில் குல்தீப் யாதவை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக சாஹலை சேர்க்கலாம் அல்லது ஜடேஜாவிற்கு பதிலாக சாஹல் வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -