செஸ் போட்டிகளில் இருந்து நான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இவர் கொடுத்த ஊக்கமே எனக்கு உதவியது – சாஹல் ஓபன் டாக்

Chahal-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சாஹல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தனது அசாத்தியமான பந்துவீச்சின் மூலம் விரைவில் இந்திய அணியில் இடம் பெற்று தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர் இதுவரை 52 ஒருநாள் போட்டிகளிலும், 42 டி20 போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Chahal

- Advertisement -

ரிஸ்ட் ஸ்பின்னரான இவர் எதிரணி வீரர்களை எந்நேரத்திலும் வீழ்த்தும் திறமை படைத்த இருப்பதால் இவரை தொடர்ந்து கோலி அணியில் முக்கிய பந்துவீச்சாளராக இவரை வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது தான் செஸ் விளையாட்டில் இருந்து எவ்வாறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வந்தேன் என்பது குறித்து தனது கருத்தினை பேட்டியாக அளித்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் காலடி வைப்பதற்கு முன்பே தேசிய அளவில் செஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் 12 வயது பிரிவில் தேசிய சாம்பியன் ஆன இவர் உலக சாம்பியன்ஷிப் தொடரில் 16 வயதில் கலந்து கொண்டுள்ளார். இது மட்டுமின்றி இந்திய செஸ் உறுப்பினர் அமைப்பிலும் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது.

Chahal

இந்நிலையில் 5 முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் எவ்வாறு தனது வாழ்க்கையை திருப்பினார் என்பது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது : விஸ்வநாதன் ஆனந்த் என்னை மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று கூறியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் விளையாடிய காலத்தில் எனக்கு ரோல்மாடல் அவர்தான்.

- Advertisement -

1998 ஆம் ஆண்டு முதல் செஸ் மற்றும் கிரிக்கெட் என இரண்டிலும் விளையாடி வந்தேன். அப்போது ஒரு முறை ஆனந்த் ஒரே நேரத்தில் இரண்டு விளையாட்டிலும் கவனம் செலுத்ததே. செஸ் போட்டிக்காக 10 முதல் 12 மணி நேரம் கிரிக்கெட் போட்டிக்காக 6 முதல் 8 மணி நேரம் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் உனக்கு அது கடினமாக இருக்கும்.

chahal

எனவே ஏதாவது ஒரு விளையாட்டை தேர்வு செய் அதை நோக்கி பயணித்தால் வெற்றி நிச்சயம் என்று என்னிடம் கூறினார். மேலும் அதன்பிறகு நான் கிரிக்கெட்டை தேர்வு செய்து விளையாட போவதாக என் தந்தையிடம் கூறினேன் என் தந்தையும் அனுமதித்தால் இன்று நான் பெரிய கிரிக்கெட் வீரராக மாறியுள்ளேன்.

சில சமயங்களில் நான் போட்டிகளில் விக்கெட் வீழ்த்தாமல் இருக்கும் பொழுது நான் அமைதியாக இருக்க காரணம் செஸ் கத்துக்கொடுத்த பொறுமைதான் என்றும் சாஹல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement