நான் ஐ.பி.எல் போட்டிகளில் சாதிக்க ரோஹித்தும் ஒரு காரணம் – மனம்திறந்த சாஹல்

Chahal-1
- Advertisement -

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் யுஜவேந்திர சஹால் 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். ஆனால் அந்த அணியில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல், இரண்டு வருடங்கள் கழித்து அந்த அணிக்காக முதல் போட்டியில் ஆடினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அந்த காலகட்டத்தில் ஹர்பஜன் சிங் மற்றும் பிரக்யான் ஓஜா ஆகியோர் சுழற்பந்து வீச்சை கவனித்துக் கொண்டிருந்தனர்.

chahal

- Advertisement -

அதன் பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர் களமிங்கினார். அப்போது 2 விக்கெட்டுகளை எடுத்து பெங்களூரு அணியை வீழ்த்த உதவியாக இருந்தார். இந்த போட்டியை பற்றி தற்போது பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்…. நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த போது என்னுடன் சேர்த்து மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர்.

அந்த வருடத்தில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆடும் போது 13 வீரர்கள் விளையாட தயாராக இருந்தோம். மற்றவர்களெல்லாம் காயம் காரணமாக வெளியேறினர். இதன்காரணமாக எப்படியாவது நான் விளையாடி விடுவேன் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். 2013ம் ஆண்டு தான் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

Chahal

அவர் கேப்டன் ஆனவுடன் என்னிடம் வந்து நின்று விளையாட போகிறாய் என்று என்னிடம் கூறினார். அதற்கு நான் ஏற்கனவே இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்கின்றனர் என்று கூறினேன். அதற்கு அவர், தற்போது நான்தான் கேப்டன் இன்று நீ விளையாட போகிறாய் என்று ஆணித்தரமாகக் கூறினார். என் மீது நம்பிக்கை வைத்து என்னை அணியில் சேர்த்தார்.

chahal

அன்று 2 விக்கெட்டுகளை எடுத்து பெங்களூரு அணியை வீழ்த்த உதவினேன் இதற்கு காரணம் ரோகித் சர்மா தான் என்று கூறியுள்ளார் யுஜவேந்திர சாஹல். இவ்வாறு சாஹல் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement