ஐ.சி.சி யின் புதிய விதியினை கிண்டல் செய்த சாஹல். அவரு சொல்றதுலயும் தப்பில்ல – விவரம் இதோ

Chahal
- Advertisement -

கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பெரும் விளையாட்டு போட்டியில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் கால்பந்து என அனைத்து விளையாட்டு போட்டிகளில் கிட்டத்தட்ட பல மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடரும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மீண்டும் எப்போது கிரிக்கெட் போட்டிகள் துவங்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Chahal

- Advertisement -

இந்நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் துவங்கும் பட்சத்தில் வீரர்களின் பாதுகாப்பிற்காக கைகுலுக்குதல் மற்றும் கட்டித்தழுவது போன்றவை தவிர்க்கப்படும் என்று தெரிகிறது. மேலும் எச்சில் மூலம் இந்நோய் பரவுவதால் கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பெரிய பாதிப்பு இருக்கிறது.

ஏனெனில் பந்தை பளபளப்பாக மாற்ற கிரிக்கெட் வீரர்கள் பந்தில் எச்சில் தடவி பயன்படுத்துவார்கள். இந்நிலையில் கரோனா வைரஸ் எச்சில் மூலமாக பரவுவதன் காரணமாக, இனி இந்த பெரும் தாக்கங்கள் முடிந்த பின்னர், துவங்கும் முதல் கிரிக்கெட் போட்டியில் எச்சில் தடவ ஐசிசி தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

Chahal

மேலும் ஒரு சிறிய பொருள் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வீரர்களுக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு பல பந்துவீச்சாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஜவேந்திர சாஹல் நகைச்சுவையாக இந்த முடிவிற்கு ஐசிசியிடம் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : பந்தை பளபளப்பாக புதிதாக ஒரு பொருள் ஒன்றைக் கொடுத்தால் பந்து வீசும்போது ஸ்விங் மற்றும் சீம் ஆகாது. இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகி விடும். இதனால் அதிகம் சிக்ஸர் அடிப்பார்கள். அப்போது அதிகம் சிக்சர் அடித்தால் வெளியில் அடிக்கப்பட்ட பந்தை பேட்ஸ்மேன்களை சென்று கொண்டு வரவேண்டும் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் சாஹல்.

chahal

மேலும் ஐ.சி.சி யின் இந்த புதிய யோசனைக்கு ஏற்கனவே வேகப்பந்துவீச்சாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே பல முன்னாள் வீரர்களும் இந்த யோசனைக்கு நேரடியாக தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பிறகே இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement