- Advertisement -
உலக கிரிக்கெட்

IND vs ENG : உலகக்கோப்பை தொடரில் மிக மோசமான சாதனையை பதிவு செய்த – சாஹல்

உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 337 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக பேர்ஸ்டோ 111 ரன்களை குவித்தார். பென் ஸ்டோக்ஸ் 79 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் உலக கோப்பை தொடரில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி பத்து ஓவர்கள் வீசிய 88 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் உலககோப்பை போட்டி ஒன்றில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த இந்திய பவுலர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்தார்.

இது இந்திய அணி வீரர் ஒருவர் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த போட்டியாக அமைந்தது. இதற்கு முன்னர் ஸ்ரீநாத் 2003 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் 87 ரன்கள் கொடுத்ததே இதற்கு முன்னர் மோசமான பந்துவீச்சாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by