நியூசி அணிக்கு எதிரான 2 ஆவது போட்டியில் 2 முக்கிய மாற்றங்கள் – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் 347 ரன்கள் இந்திய அணி குவித்தும் நியூசிலாந்து அணி அதனை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி நாளை 8 ஆம் தேதி ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இவ்வளவு பெரிய ரன்கள் குவித்தும் இந்திய அணி முதல் போட்டியில் பந்து வீச்சு பலம் இன்றி போட்டியை இழந்தது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும் இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்களாக ரன்களை வாரி வழங்கும் குல்தீப் யாதவிற்கு பதிலாக சாஹலையும், தாகூருக்கு பதிலாக சைனிக்கும் வாய்ப்பு வழங்கினால் இந்தியனின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதனால் நாளைய போட்டியில் இரு முக்கிய மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு சைனிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் நாளை போட்டியில் நிச்சயம் சாஹல் இடம் பெறுவார்.

Chahal

ஏனெனில் டி20 போட்டியில் அனைத்து போட்டிகளிலும் இடம்பெற்ற சாஹல் சிறப்பாக பந்து வீசியது குறிப்பிடத்தக்கது. எனவே நாளை நடைபெற இருக்கும் போட்டியில் நிச்சயம் இந்திய அணியில் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதே கருத்தைத்தான் ரசிகர்களும் தங்களது வேண்டுகோளாக சமூகவலைதளத்தில் வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement