க்ருனால் பாண்டியாவை தொடர்ந்து மேலும் இரண்டு வீரர்களுக்கு தொற்று உறுதி – வெளியான அதிர்ச்சி தகவல்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஆனது தற்போது நடைபெற்று முடிவடைந்தது. இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு நாள் தொடரை இந்திய அணியும், டி20 தொடரை இலங்கை அணியும் 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றினர். ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி டி20 தொடரையும் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

INDvsSL

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 தொடரில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்விக்கு முக்கிய காரணமாக முன்னணி ஆல்ரவுண்டரான க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு அமைந்தது. ஏனெனில் டி20 தொடரின் முதலாவது போட்டியின் போது இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக போட்டி ஒருநாள் தாமதம் அடைந்தது மட்டுமின்றி இந்த தொடரையும் இழக்கும் சூழ்நிலையும் உண்டானது. க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பை தொடர்ந்து அடுத்து அவருடன் நெருக்கமாக இருந்த 8 வீரர்கள் இந்திய அணியில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டனர்.

Gowtham

இதன் காரணமாக இந்திய அணி கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆறு பவுலர்களுடன் விளையாடி தோல்வியடைந்தது. இந்நிலையில் தற்போது க்ருனால் பாண்டியாவுக்கு மட்டுமல்லாமல் மேலும் இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் சாஹல் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement