“தமிழன்டா…” தினேஷ் கார்த்திக்கை கொண்டாடும் தமிழக ரசிகர்கள் !

- Advertisement -

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவந்தது.இந்த தொடரில் லீக்சுற்றுகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகளின் அடிப்படையில் இந்தியஅணி முதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

sharma

- Advertisement -

கடந்த 16ம் தேதி கடைசிலீக்கில் இலங்கையுடன் மோதிய வங்கதேச அணி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.நேற்று நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக்கின் அபாரமான சிக்ஸரால் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

நேற்றைய போட்டியின் போது கடைசி 3 ஓவர்களில் இந்திய அணிக்கு 35 ரன்கள் தேவை என்ற நிலையில் அற்புதமாக 18வது ஓவரில் பந்துவீசிய முஸ்தபீஸூரின் முதல் 4 பந்துகளில் விஜய் ஷங்கரால் ரன் எடுக்க முடியவில்லை. 5வது பந்திலும் லெக் பைஸ் முறையில் 1 ரன் தான் கிடைத்தது. கடைசி பந்துக்கு மனீஷ் பாண்டே ஸ்டிரைக்கிற்கு வந்து பந்தை சிக்ஸருக்கு தூக்க அது கேட்ச் ஆனது.இதனால், இந்த ஓவரில் இந்திய அணிக்கு ஒரு ரன் மட்டும் தான் கிடைத்தது.

DK1

கடைசி இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் தேவை என்ற கடினமான நிலையில் இந்திய அணி தவிக்க தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். ஆரம்பம் முதலே அணியின் நிலையை உணர்ந்து ஆடிய தினேஷ் கார்த்திக் 19 ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்ட, இரண்டாவது பந்து பவுண்டரியாக, மூன்றாவது பந்தை மீண்டும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். நான்காவது பந்தை மிஸ்செய்ய 5வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரி விளாச 19வது ஓவரில் மட்டும் தினேஷ் கார்த்திக் 22 ரன்களை குவித்தார்.

- Advertisement -

இறுதி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷங்கர் மீண்டும் களத்தில் நிற்க கடைசி ஓவரை சௌமியா சர்க்கார் வீச முதல் பந்து வைடாக செல்ல 6 பந்துகள் 11 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.ஷங்கர் மீண்டும் பந்தை மிஸ் செய்ய 5 பந்துகளுக்கு 11 ரன் என்கிற நிலை ஏற்பட அடுத்த 2 பந்துகளில் ஷங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் தலா 1 ரன் எடுத்திட கடைசி 3 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவை என்கிற பரபரப்பு தொற்றிக்கொண்டது.

karthik

இறுதிவரை சொதப்பிய 19.4வது பந்தில் ஷங்கர் ஒரு பவுண்டரி அடிக்க கடைசி 2 பந்துகளுக்கு 5 ரன்கள் தான் தேவை என்ற நிலையில் இந்திய அணி இலகுவாக வெற்றிபெற்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்திருக்கையில்.5வது பந்தை ஷங்கர் சிக்ஸருக்கு தூக்க முயற்சித்து அவுட்டாகி இந்திய ரசிகர்களுடைய வெற்றி கனவிற்கு திடீர் முட்டுக்கட்டை போட்டு அனைவருக்கும் பிபி ஏற்றிவிட்டு சென்றார்.

இதனால் கடைசி ஒரு பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்கிற இக்காட்டான நிலையில் போட்டி சூப்பர் ஓவரை நோக்கி செல்லுமா என்று அனைவரும் எதிர்பார்க்க கடைசி பந்தை எக்ஸ்டிரா கவர் திசையில் தூக்கியடிக்க அது சிக்ஸருக்கு பறக்க பரபரப்பான திக் திக் நிமிடத்தில் இந்திய அணிக்கு நிடாஸ் கோப்பையை பெற்றுத்தந்தார் தினேஷ் கார்த்திக். தான் ஆடிய ஒன்பது பந்துகளில் 29 ரன்களை குவித்து அசத்திய தினேஷ் கார்த்திக்கிற்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றது.

karthik

சச்சின் யுவராஜ் கங்குலி சேவாக் போன்ற கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக்கை பாராட்டிட, ஒட்டுமொத்த இந்தியாவின் ஹீரோவாக ஓவர்நைட்டில் தினேஷ் கார்த்திக் மாறிட தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் இல்லையெனில் இந்த வெற்றி சாத்தியமில்லை “தமிழன் டா” என்று தமிழக ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

Advertisement