வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரைன் லாரா ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக போற்றக்கூடிய சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படுகிறார். குறிப்பாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 10,000 ரன்கள் அடித்துள்ள அவர் மிகச் சிறந்த இடது கை பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் (400*) பதிவு செய்த வீரராகவும் அவர் உலக சாதனை படைத்துள்ளார்.
அந்த சூழ்நிலையில் “லாரா : இங்கிலாந்து கதைகள்” என்ற பெயரில் சமீபத்தில் பிரையன் லாரா ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார். அதில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தம்மை விட முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்ல் கூப்பர் மிகவும் திறமையான பேட்ஸ்மேன் என்று பிரைன் லாரா பாராட்டியிருந்தார். அதே சமயம் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் குரல் மிகவும் பயமுறுத்தக் கூடியதாக இருக்கும் என்று லாரா கூறியிருந்தார்.
மன்னிப்பு கேளுங்க:
அப்படிப்பட்ட கனத்த குரலில் கடுமையாக பேசக்கூடிய ரிச்சர்ட்ஸ் 3 வாரத்திற்கு ஒருமுறை தம்மையும் 1 வாரத்திற்கு ஒருமுறை கார்ல் கூப்பரையும் அழ வைத்து விடுவார் என்றும் அந்த புத்தகத்தில் பிரைன் லாரா கூறியிருந்தார். இந்நிலையில் அர்த்தமற்ற இந்த கருத்துக்களை கூறியதற்காக பிரைன் லாரா மன்னிப்பு கேட்க வேண்டுமென விவியன் ரிச்சர்ட்ஸ், கார்ல் கூப்பர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் அந்த உண்மையற்ற கருத்துக்களால் தாங்கள் மனமுடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இது பற்றி ரிச்சர்ட்ஸ் மற்றும் கூப்பர் ஆகியோர் சேர்ந்தார் போல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது பின்வருமாறு. “சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் கார்ல் கூப்பர் திரு. பிரையன் லாரா சமீபத்தில் வெளியிட்ட புத்தகத்தில் அவர்களைப் பற்றி தெரிவிக்கப்பட்ட தவறான விளக்கங்களால் ஆழ்ந்த மனமடைந்துள்ளனர்”
“முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதார்த்தத்தை சிதைப்பது மட்டுமில்லாமல் அவர்களின் கதாபாத்திரங்களுக்கு அநியாயமாக தீங்கு விளைவிக்கும் வகையில் பாதித்துள்ளது. குறிப்பாக ரிச்சர்ட்ஸ் மிஸ்டர். கூப்பரை வாரத்திற்கு ஒரு முறை அழ வைத்தார் என்ற கூற்று முற்றிலும் தவறானது. இது ஆதாரமற்றது மட்டுமல்ல இரு தரப்பினரையும் ஆழமாக காயப்படுத்துவதாக அமைகிறது”
இதையும் படிங்க: சச்சின் டெண்டுலகரின் அந்த வாழ்நாள் உலக சாதனையை ஜோ ரூட் உடைப்பார்.. மைக்கேல் வாகன் உறுதி
“எனவே திரு. லாரா உடனடியாக இந்த பொய்யான கூற்றுக்களை பகிரங்கமாக வாபஸ் பெற வேண்டும். மேலும் எங்களுக்கு ஏற்பட்ட தீங்குக்கு அவர் நேர்மையான மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருகிறோம். பொது உரையாடலில் நேர்மை, தனிப்பட்ட விஷயங்கள், தொழில் வாழ்க்கை போன்றவை உண்மையாக அமைவது அவசியம்” என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து பிரைன் லாரா என்ன சொல்ல போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.