அந்த சீரிஸ்ல விராட் கோலி ரேஞ்சுக்கு ரோஹித் அடிக்கமாட்டாரு.. தீப் தாஸ்குத்தா கருத்து

Deep dasGupta 2
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 11ஆம் தேதி துவங்குகிறது. அதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய மூத்த வீரர்கள் 14 மாதங்கள் கழித்து மீண்டும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடியிருந்த அவர்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்தனர். அதனால் கடந்த டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு காரணமாக இருந்த சீனியர் வீரர்களை விடுவித்து ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய இளம் அணி இம்முறை விளையாடும் என்று செய்திகளும் எதிர்பார்ப்புகளும் வலம் வந்தன.

- Advertisement -

விராட் அதிகமா அடிப்பாரு:
இருப்பினும் பாண்டியா தற்போது காயமடைந்துள்ளதால் மீண்டும் வந்துள்ள ரோகித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையில். கேப்டனாக விளையாடுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவை விட விராட் கோலி தான் அதிக ரன்கள் அடிப்பார் என்று முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா கணித்துள்ளார்.

எனவே 2024 ஐபிஎல் தொடரில் சற்று சுமாராக செயல்பட்டாலும் பெரிய அனுபவத்தை கொண்டுள்ள ரோஹித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக விளையாடுவது சரியான முடிவாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற வீரர்களின் வருங்காலத்தை பற்றிய முடிவை நீங்கள் ஐபிஎல் தொடரை அடிப்படையாக வைத்து எடுக்க முடியாது. அத்தொடரில் விராட் கோலி 500+ ரன்கள் எடுப்பார் என்று நம்புகிறேன்”

- Advertisement -

“சொல்லப்போனால் விராட் கோலி சற்று சுமாராக விளையாடினாலும் அந்த தொடரில் எப்படியும் 500 – 600 ரன்கள் அடித்து விடுவார். ஆனால் இம்முறை மும்பையின் கேப்டனாக இல்லாத ரோகித் சர்மா வித்தியாசமான வேலையில் எப்படி செயல்படப் போகிறார் என்பதை பார்க்க வேண்டும். எனவே உலகக் கோப்பை அணியை இப்போதே 90 – 95% உறுதி செய்து விட வேண்டும். ஏனெனில் விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் ஐபிஎல் தொடரில் சமமாக பெரிய ரன்கள் அடிப்பார்கள் என்று நான் கருதவில்லை”

இதையும் படிங்க: டி20 மேட்ச்சை பொறுத்தவரை விராட் கோலிக்கு ஏற்ற இடம் அதுதான்.. அங்கதான் அவர் ஆடனும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

“டி20 கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் மிகவும் முக்கியமாகும். அதில் ஐபிஎல் தொடரில் ரோகித் கேப்டனாக செயல்படாவிட்டாலும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்துவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது” என்று கூறினார். அவர் இப்படி சொல்வதற்கான காரணம் என்னவெனில் கடந்த சில வருடங்களாகவே விராட் கோலி ஐபிஎல் தொடரில் 400 – 500 போன்ற நல்ல ரன்களை குவித்து வருகிறார். ஆனால் ரோகித் சர்மா சுமாராக செயல்பட்டு கடந்த வருடம் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்று மோசமான சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement