அதை அடிச்சக்கவே முடியாது.. அவர் தான் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர்.. ரோஹித் சர்மா வெளிப்படை

Rohit Shama Jadeja Kohli
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி புனேவில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்து 8 புள்ளிகளை பெற்றுள்ளது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 256/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சிராஜ், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள். அதைத்தொடர்ந்து 257 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 53, சுப்மன் கில் 48 ரன்களை அடித்து மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். அதனால் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களில் அவுட்டானாலும் விராட் கோலி சதமடித்து 103*, ராகுல் 34* ரன்கள் எடுத்து 41.3 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

ரோஹித் கருத்து:
அதனால் இந்தியா தங்களுடைய செமி ஃபைனல் வாய்ப்பை பிரகாசப்படுத்திய நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் 3வது தோல்வியை பதிவு செய்தது. முன்னதாக இந்த போட்டியில் பந்து வீச்சில் மிகச்சிறப்பாக செயல்பட்ட ரவிந்திர ஜடேஜா 10 ஓவரில் 38 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து பும்ரா, குல்தீப் உள்ளிட்ட இதர பவுலர்களை காட்டிலும் 3.80 என்ற குறைந்த எக்கனாமியில் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

குறிப்பாக பேட்டிங்க்கு சாதகமான புனே மைதானத்தில் மிடில் ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்திய அவர் வங்கதேசம் 300 ரன்களை தொடுவதை இந்தியா தடுக்க உதவினார். அதே போல பேட்டிங்கில் ரோஹித் மற்றும் கில் ஆகியோர் சிறப்பாக விளையாடி ஆரம்பத்திலேயே எஞ்சிய வெற்றியை உறுதி செய்து விட்டனர். ஆனாலும் முக்கிய நேரத்தில் வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி சதமடித்ததால் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

அதனால் ஆட்டநாயகன் விருது ரவீந்திர ஜடேஜாவுக்கு தான் கொடுத்திருக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் பேசி வருகின்றனர். சொல்லப்போனால் விராட் கோலியே அவ்விருதை பறித்ததற்காக ஜடேஜாவிடம் கலகலப்பான மன்னிப்பு கேட்டார். இருப்பினும் சதமடித்த விராட் கோலி தான் ஆட்டநாயகன் விருது பெறுவதற்கு தகுதியானவர் என்று தெரிவிக்கும் ரோஹித் சர்மா போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: விராட் கோலி செல்ஃபிஷா.. அதை பற்றி தெரியாதவங்க பேசாதீங்க.. விமர்சனங்களுக்கு ஸ்ரீகாந்த் பதிலடி

“தேவையான லைன் மற்றும் லென்த்துகளை புரிந்துகொண்டு சரியாக வீசும் அளவுக்கு பவுலர்கள் சாதுரியமாக இருக்கின்றனர். ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு ஒரு அற்புதமான கேட்ச்சையும் பிடித்தார். ஆனால் சதம் என்பது சதமாகும் நீங்கள் அதை தோற்கடிக்க முடியாது. மேலும் இது போன்ற வெற்றிகளை நாங்கள் தொடர்ந்து பார்க்கிறோம். பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாக துவங்கவில்லை என்றாலும் மிடில் மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டோம்” என்று கூறினார்.

Advertisement