ஹீரோவாக இருந்தாலும் ஜீரோவாக போறீங்க – செமி பைனலில் இந்தியாவின் நிலைமையை பற்றி நாசர் ஹுசைன் சொல்வது என்ன

Nasser-1
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்ததால் நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் குரூப் 1 புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்த இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஃபைனல் செல்வதற்காக போட்டி நடைபெறும் அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியினர் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

IND vs ENg Rohit Sharma Jos Buttler

- Advertisement -

முன்னதாக கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை எம்எஸ் தோனி தலைமையில் வென்ற இந்தியா அதன்பின் கடந்த 9 வருடங்களாக அடுத்த கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது. அதிலும் குறிப்பாக 2013க்குப்பின் நடைபெற்ற பெரும்பாலான ஐசிசி தொடர்களில் இதே போல லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்ட இந்தியா நாக் அவுட் சுற்றில் முக்கிய நேரங்களில் சொதப்பி கோப்பையை வெல்லாமல் வெறும் கையுடன் வெளியேறியதால் சந்தித்த வேதனையை இன்னும் மறக்க முடியாமல் ரசிகர்கள் தவிக்கின்றனர்.

ஹீரோ முதலில் ஜீரோ:
மேலும் டி20 உலக கோப்பைகளிலும் முதல் வருடத்திலேயே கோப்பை வென்ற இந்தியா அதன்பின் 2009, 2010, 2012 ஆகிய வருடங்களுடன் கடந்த 2021இல் பரம எதிரியான பாகிஸ்தானிடம் வரலாற்றில் முதல் முறையாக தோற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. அத்துடன் 2014இல் ஃபைனல் வரை முன்னேறியும் இலங்கையிடம் கோப்பையை கோட்டை விட்ட இந்தியா 2016இல் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸிடம் அரையிறுதியில் சொதப்பி வெளியேறியது. அப்படி லீக் சுற்றில் அசத்தினாலும் நாக் அவுட் சுற்றில் சொதப்புவதைப் போல இம்முறையும் இந்தியா தடுமாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.

Arshdeep Singh 1

குறிப்பாக இங்கிலாந்தை விட அதிகப்படியான ரசிகர்களின் ஆதரவை கொண்டிருப்பதே இந்த உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் இந்தியாவுக்கு அதிகப்படியான அழுத்தத்தை கொடுக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி டெய்லி மெயில் பத்திரிக்கையில் எழுதியுள்ளது பின்வருமாறு. “ஐபிஎல் காரணமாக உலகிலேயே இதர அணிகளை காட்டிலும் இந்தியா அதிகப்படியான டி20 கிரிக்கெட் விளையாடி வருகிறது. அதனாலயே அவர்களிடம் திறமையான அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதிகமாக உள்ளனர். அந்த வகையில் வரும் வியாழக்கிழமை அடிலெய்டில் நடைபெறும் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அவர்கள் அதிகப்படியான அச்சுறுத்தலை கொடுப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்”

- Advertisement -

“இருப்பினும் அந்த போட்டியில் எதிரணியை விட அவர்கள் தான் அதிகப்படியான அழுத்தத்தில் விளையாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. என்னைப் பொறுத்த வரை அந்த போட்டியில் அவர்கள் மிக விரைவாக ஹீரோவிலிருந்து ஜீரோவாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்களுக்கு அதிகப்படியான ஆதரவு உள்ளது. குறிப்பாக தற்போது வேண்டுமானால் அவர்கள் அனைவரையும் அடித்து நொறுக்கி வெற்றி நடை போட்டு இந்த உலக கோப்பையை வெல்லும் அணியாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒரு சிறிய தவறு செய்தால் அவர்களை சுற்றி மேகங்களைப் போல் இருக்கும் ரசிகர்களின் சத்தங்கள் இன்னும் அதிகமாகி விடும்”

hussain

“அந்த வகையில் இப்போட்டியில் இங்கிலாந்து அழுத்தத்துடன் விளையாடுகிறது என்று நீங்கள் நினைத்தால் அதை விட மில்லியன் கணக்கான அழுத்தத்துடன் இந்தியாவும் விளையாடும்” என்று கூறினார். அதாவது ஆதரவு கொடுக்கும் அதிகப்படியான ரசிகர்களே இம்முறை இந்தியாவுக்கு ஆபத்து விளைவிப்பவர்களாக இருப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து 2016இல் ஃபைனலில் ஒரு லட்சம் இந்திய ரசிகர்கள் அமர்ந்திருந்த கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கடைசி ஓவரில் சொதப்பி வெஸ்ட் இண்டீஸிடம் கோப்பையை கோட்டை விட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement