ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் இந்தியாவால் சாதிக்க முடியுமா? நிதர்சனத்தை சொல்லும் புள்ளிவிவரம் இதோ

Bumrah-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 உலக கோப்பை 2022 தொடர் துவங்குவதற்கு இன்னும் 15 நாட்கள் கூட இல்லாத நிலையில் 2007க்குப்பின் கோப்பையை வெல்வதற்காக தீவிரமாக தயாராகி வரும் இந்தியாவிற்கு ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் உலக அளவில் மிகசிறந்த சுழல்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக கருதப்படும் ரவீந்திர ஜடேஜா காயத்தால் ஏற்கனவே வெளியேறிய நிலையில் கடைசி நேரத்தில் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த 2016இல் இந்தியாவுக்காக அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கும் அவர் நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து பவுலிங் துறையின் முதுகெலும்பாக உருவாகியுள்ளார்.

Bumrah

- Advertisement -

குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே, மிடில் ஓவர்களில் கச்சிதமாக பந்து வீசக்கூடிய அவர் பேட்ஸ்மேன்கள் ரன்களை அடிக்கத் துடிக்கும் கடைசி கட்ட ஓவர்களில் துல்லியமான யார்கர் பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுத்து போட்டியை இந்தியாவின் பக்கம் மாற்றக்கூடிய கருப்பு குதிரையாக பார்க்கப்படுகிறார். மறுபுறம் டி20 உலக கோப்பையில் விளையாட தேர்வாகியுள்ள புவனேஸ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வள்ளலாக வாரி வழங்கும் நிலையில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்றழைக்கப்படும் ஜஸ்பிரித் பும்ரா விலகுவது உண்மையாகவே இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

வெல்ல முடியும்:
அதுபோக வேகத்துக்கு கை கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலிய மைதானங்களில் 140 கி.மீ வேகத்தில் வீசினால் மட்டுமே எதிரணிக்கு சவாலை கொடுக்க முடியும் என்ற நிலைமையில் ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங், புவனேஸ்வர் குமார் ஆகிய இதர பவுலர்கள் பெரும்பாலும் 130+ கி.மீ வேகத்தில் மட்டுமே வீசக் கூடியவர்களாக உள்ளனர். மேலும் அவரில்லாமல் சமீபத்தில் களமிறங்கிய ஆசிய கோப்பையில் தோல்வி கிடைத்தது. அப்படி எந்த வகையில் யோசித்து பார்த்தாலும் அவர் இல்லாதது இந்தியாவின் உலக கோப்பை கனவை முன்கூட்டியே தகர்ப்பதற்கான பரிதாப சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது.

IND Japrit Bumrah

இருப்பினும் கிரிக்கெட் என்பது 11 பேர் கொண்ட அணி விளையாட்டு என்ற நிலைமையில் ஒருவர் காயத்தால் வெளியேறுவது பின்னடைவு என்றாலும் அதற்காக தோல்வி உறுதியென்று சொல்ல முடியாது. அவரில்லாத நிலைமையில் ஏகப்பட்ட அனுபவம் கொண்ட புவனேஸ்வர் குமார் போன்ற பவுலர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி தாமாக தேடி வரும் என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் இந்த உலக கோப்பையில் களமிறங்க தயாராகும் இந்தியாவுக்கு அவரில்லாமல் சாதிக்க முடியும் எனக்கூறும் புள்ளி விவரங்களைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. கடந்த 2020 நவம்பர் முதல் தற்போது வரை இந்தியா மொத்தம் 49 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 34 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா 14 தோல்விகளை சந்தித்தது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. அந்த காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக 2021 டி20 உலகக் கோப்பை மற்றும் 2022 ஆசிய கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

Jasprit Bumrah

2. அந்த காலகட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா இருந்த 10 போட்டிகளில் 8 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா 2 தோல்விகளை மட்டுமே சந்தித்தது.

- Advertisement -

2. அதே சமயம் ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் அந்த காலகட்டத்தில் பங்கேற்ற 39 போட்டிகளில் 26 வெற்றிகளைப் பதிவு செய்துள்ள இந்தியா 12 தோல்விகளைச் சந்தித்தது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

INDIA Arshdeep Singh Harshal Patel

4. இதிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா இருப்பது வெற்றியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை காட்டினாலும் அவரில்லாமல் இந்தியா ஒன்றும் மோசமான தோல்விகளை சந்திக்கவில்லை. எனவே டெத் ஓவர்களை அர்ஷிதீப் சிங், தீபக் சஹர் போன்ற பவுலர்களை வைத்து சமாளித்தால் பவர்ப்ளே ஓவர்களில் புவனேஸ்வர் குமார் மிரட்டலாக பந்துவீசி வெற்றிகளில் பங்காற்றுவார்.

இதையும் படிங்க: உண்மையாகவே விலகிவிட்டாரா – ஜஸ்பிரித் பும்ராவின் காயம் பற்றி கோச் ராகுல் டிராவிட் கொடுத்த அப்டேட் இதோ

5. எனவே பூனை கண் மூடினால் உலகம் இருண்டு விடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு அனுபவமிக்க கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலைமை எப்படி சமாளிப்பது என்பதற்கான திட்டங்களை முன் கூட்டியே வகுத்து அதற்கேற்றார் போல் செயல்பட்டால் நிச்சயம் கோப்பை இந்தியா வந்து சேரும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் 2007இல் ஸ்ரீசாந்த், இர்பான் பதான், ஆர்பி சிங் போன்ற பெரிய அளவில் அனுபவமில்லாத வேகப்பந்து வீச்சாளர்களை வைத்தே எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய முதல் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement