MI vs SRH : முதல் 2 மேட்ச் சேம்பிள் பார்த்தோம். இனிமே தான் எங்களோட ஆட்டத்தை பாக்க போறீங்க – கேமரூன் கிரீன் பேட்டி

Cameron-Green-1
- Advertisement -

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் போட்டி நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது 14 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர் துவங்கியதும் முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த மும்பை அணி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

MI vs SRH

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று முடிந்த மூன்று ஆட்டங்களிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியானது தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்து அசத்தியது.

பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் குவித்ததால் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் பேட்டிங்கின் போது 40 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 64 ரன்கள் குவித்த கேமரூன் கிரீன் பந்துவீச்சிலும் 4 ஓவர் முழுவதுமாக வீசி 29 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

Cameron Green

இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய மும்பை அணியின் ஆல்ரவுண்டான கேமரூன் கிரீன் கூறுகையில் : முதல் இரண்டு போட்டியிலும் நாங்கள் தோல்வியை சந்தித்தது எங்களுக்கு பல்வேறு விடயங்களை கற்றுக்கொள்ள வழி வகுத்தது.

- Advertisement -

அந்த வகையில் நானும் சரி, எங்களது அணியும் சரி முதல் இரண்டு போட்டிகளில் பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டோம். இந்த போட்டியில் நான் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது சற்று சூழ்நிலை கடினமாகவே இருந்தது. ஆனாலும் இந்த போட்டியில் நானும் சரி, எங்களது அணியும் சரி நாங்கள் வைத்திருந்த திட்டங்களை மிகச்சரியாக உபயோகித்து வெற்றியை பெற்றுள்ளோம். நான் என்னுடைய பந்துவீச்சில் அதிக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

இதையும் படிங்க : MI vs SRH : இந்த போட்டிக்கு முன்பாக என் அப்பா என்கிட்ட சொன்னது இதுதான் – அர்ஜுன் டெண்டுல்கர் நெகிழ்ச்சி

அதிலும் குறிப்பாக கடைசி கட்ட ஓவர்களை வீச தனியாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். மும்பை அணி நிச்சயம் இந்த வெற்றியை அப்படியே தொடரும். முதல் இரண்டு போட்டிகளை தவிர்த்து தற்போது நாங்கள் நல்ல முமென்ட்டத்தில் இருக்கிறோம். அதனை அப்படியே கொண்டு செல்வோம் என கேமரூன் கிரீன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement