MI vs SRH : இந்த போட்டிக்கு முன்பாக என் அப்பா என்கிட்ட சொன்னது இதுதான் – அர்ஜுன் டெண்டுல்கர் நெகிழ்ச்சி

Arjun-Tendulkar
- Advertisement -

மும்பை அணி கடைசியாக சூரியகுமார் யாதவ் தலைமையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக அறிமுகமானார். அந்த போட்டியில் இரண்டு ஓவர்களை மட்டுமே வீசிய அவர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு இரண்டாவது போட்டிக்கான வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

Arjun Tendulkar

- Advertisement -

அதனை மிகச் சிறப்பாக பயன்படுத்திய அர்ஜுன் டெண்டுல்கர் நேற்றைய இந்த 25-ஆவது லீக் போட்டியில் 2.5 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து போட்டியின் கடைசி விக்கெட்டான புவனேஸ்வர் குமாரை ஆட்டமிழக்க வைத்து இந்த போட்டியில் மும்பை அணியை வெற்றிக்கும் அழைத்து சென்றார். அதன்படி நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இந்த 25 ஆவது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது.

பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 178 ரன்களை மட்டுமே குவித்ததால் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு ஓவர்களை வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் போட்டியின் கடைசி 20-ஆவது ஓவரை வீசினார். கடைசி ஓவரில் 20 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது அந்த ஒரு ஓவரில் 5 ரன்களை மட்டுமே குவித்தது.

Arjun Tendulkar 1

கடைசி ஓவரை அற்புதமாக வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் புவனேஸ்வர் குமாரை ஆட்டம்மிழக்க வைத்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது பந்துவீச்சு குறித்து பேசிய அர்ஜுன் டெண்டுல்கர் கூறுகையில் : என்னுடைய முதல் விக்கெட்டை ஐபிஎல் கிரிக்கெட்டில் வீழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சி.

- Advertisement -

என்னுடைய திட்டமெல்லாம் வைட் யார்க்கராக பந்துவீச வேண்டும் என்பதும், மைதானத்தின் பெரிய பகுதிகளில் பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க வைக்க வேண்டும் என்பது மட்டும்தான். அந்த வகையில் இந்த போட்டியில் நான் மிகச் சிறப்பாக பந்துவீசியதாக உணர்கிறேன். கேப்டன் எப்பொழுது என்னை பந்துவீச அழைத்தாலும் நான் அதற்கு தயாராக இருக்கும்படி திட்டமிட்டு கொள்கிறேன். அதோடு இந்த போட்டிக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் என்னிடம் நிறைய பேசினார். நாங்கள் நிறைய விஷயங்களை பற்றி விவாதித்துக் கொண்டோம். இந்த போட்டிக்கு முன்பாக அவர் என்னிடம் சொன்னது ஒன்றுதான்.

இதையும் படிங்க : SRH vs MI : மும்பை அணிக்கெதிராக நாங்க செய்த இந்த தப்புதான் எங்க தோல்விக்கு காரணம் – எய்டன் மார்க்ரம் பேட்டி

ஒவ்வொரு போட்டிக்காகவும் நீ எதை பயிற்சி செய்கிறாயோ அதையே உன் பலமாக வைத்து பந்துவீசு. உன்னுடைய போகஸ் எல்லாம் உன்னுடைய பந்துவீச்சில் மட்டுமே இருக்க வேண்டும். பந்தினை எந்த லைனில், எவ்வளவு வேகத்தில் வீச வேண்டும் என அனைத்திலும் கவனமாக இருந்து வீசவேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படியே இந்த போட்டியில் நான் பந்து வீசினேன். கூடுதலாக ஸ்விங்கும் எனக்கு கிடைத்தது போனஸ் என அர்ஜுன் டெண்டுல்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement