SRH vs MI : மும்பை அணிக்கெதிராக நாங்க செய்த இந்த தப்புதான் எங்க தோல்விக்கு காரணம் – எய்டன் மார்க்ரம் பேட்டி

Markram
- Advertisement -

ஹைதராபாத் நகரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது.

MI vs SRH

- Advertisement -

மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 64 ரன்கள் குவித்து அசத்தார். பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களை குவித்தது. இதன் காரணமாக மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது அணி வெற்ற தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் மார்க்ரம் பேசுகையில் கூறியதாவது : இந்த இரவு எங்களுக்கு சிறந்த ஒன்றாக அமையவில்லை. இருந்தாலும் எங்களது வீரர்கள் கடைசிவரை போட்டியை கொண்டு சென்றனர்.

MI

இந்த போட்டியில் நாங்கள் தோல்வியடைய காரணம் யாதெனில் : பந்துவீச்சின் போது கடைசி கட்டத்தில் சற்று கூடுதலாக ரன்களை வழங்கி விட்டோம். அதுதான் எங்களுக்கு பாதகமாக அமைந்தது. இந்த மைதானம் சற்று ஸ்லோவாக இருந்ததால் பந்தில் இருந்து வேகத்தை எடுத்து விட்டால் பந்து பேட்டிற்கு சரியாக வருவதில்லை.

- Advertisement -

இந்த போட்டியில் நாங்கள் முதலில் பந்துவீச தேர்வு செய்த போது இரண்டாம் பாதியில் டியூ வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் நினைத்த அளவிற்கு இந்த போட்டியில் டியூ தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதையும் படிங்க : MI vs SRH : மும்பை இந்தியன்ஸ்ஸோட பலமே அவங்கதான். அவங்கள நாமதான் பாத்துக்கனும் – வெற்றிக்கு பிறகு ரோஹித் பேட்டி

நாங்கள் இந்த போட்டியில் அடைந்த தோல்வியிலிருந்து பல பாடங்களை கற்றுள்ளோம். அதோடு எந்தெந்த பகுதிகளில் நாங்கள் முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதை திட்டமிட்டு அதன்படி இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சிப்போம் என மார்க்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement