ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் கடந்த ஆண்டு முதுகுப்பகுதியில் ஏற்பட்ட அழுத்த எலும்பு முறிவு காரணமாக பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025 ஐ.பி.எல் டிராபி என முக்கிய தொடர்களை தவறவிட்ட அவர் மீண்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார்.
நான் காயத்திலிருந்து மீண்டுவர பும்ராவே உதவினார் : கேமரூன் கிரீன்
அதன் காரணமாக ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன் தொடரின் இறுதிப்போட்டியின் போது மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார். கடந்த பல மாதங்களாகவே அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்த அவர் தற்போது முழு உடற்தகுதியை எட்டியுள்ளதால் நேரடியாக அணியில் விளையாடுவார் என்றும் தெரிகிறது.
இந்நிலையில் தான் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட அழுத்த முறிவு காரணமாக காயத்தை சந்தித்திருந்த வேளையில் அந்த காயத்திலிருந்து விடுபட இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா எவ்வாறு உதவினார்? அவரது வார்த்தைகள் தான் இவ்வளவு விரைவில் குணமடைந்து சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்ப காரணம் என்றும் கேமரூன் கிரீன் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் காயமடைந்த பிறகு அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள் என்னை பும்ரா தொடர்பு கொண்டு பேசினார். அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஒரு முக்கிய டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அந்த பிசியான நேரத்திலும் என்னை தொடர்பு கொண்ட அவர் : இந்த அறுவை சிகிச்சையின் போது உடல் ரீதியாக என்னென்ன சவால்கள் ஏற்படும்? அதிலிருந்து எவ்வாறு மீண்டு வரவேண்டும் என்பது குறித்த பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இப்படி ஒரு கடினமான சூழலில் ஒருவர் நமக்காக ஆதரவாக பேசும் போது அது நமக்கு நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையிலேயே அவர் என்னை தொடர்பு கொண்டு பேசி இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து எல்லாம் கூறியிருந்தார். அவரது அட்வைஸின் படியே நடந்து கொண்டதால் என்னால் விரைவில் காயத்தில் இருந்து வெளிவர முடிந்தது என கேமரூன் கிரீன் பேசியுள்ளார்.
இதையும் படிங்க : சிஎஸ்கே, மும்பை மாதிரி ஆர்சிபி இதை அப்போவே செஞ்சுருந்தா.. இப்படி நடந்துருக்காது.. கவாஸ்கர் ஆதங்கம்
அவர் இப்படி பேசுவதற்கு முக்கிய காரணம் யாதெனில் : ஏற்கனவே பும்ரா முதுகுப்பகுதியில் இதேபோன்ற காயம் ஏற்பட்டு அவரும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் வந்துள்ள பும்ரா தற்போது மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே அவரை போன்று அதே காயத்தை சந்தித்த கேமரூன் கிரீனுக்கு தன்னுடைய அனுபவங்கள் எவ்வாறு இருந்தன என்பதை அவர் பகிர்ந்ததாலே பும்ராவிற்கு கேமரூன் கிரீன் நன்றி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



