MI vs SRH : என்னோட பவர் ஹிட்டிங்கிற்கு காரணம் இதுதான். முதல் ஐ.பி.எல் சதத்திற்கு பிறகு – ஆட்டநாயகன் கேமரூன் க்ரீன் பேட்டி

Cameron-Green
- Advertisement -

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 69-ஆவது லீக் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பினை பெற முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்க மும்பை அணியானது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது.

Cameron Green 1

- Advertisement -

பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது துவக்கத்திலேயே இஷான் கிஷன் விக்கெட்டை இழந்தது. 20 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்ததால் மும்பை அணி சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மூன்றாவது வீரராக களம் புகுந்த கேமரூன் கிரீன் கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து துவக்கம் முதலே அதிரடி காட்டினார்.

குறிப்பாக தான் சந்தித்த முதல் பந்தில் இருந்தே பவுண்டரி அடிக்க ஆரம்பித்த கேமரூன் கிரீன் இந்த போட்டியில் ரோகித் சர்மாவுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 128 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதன் பின்னர் ரோகித் சர்மா 56 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறிய பிறகு சூரியகுமார் யாதவுடனும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் சதம் அடித்து மும்பை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Cameron Green 2

இறுதியில் 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 201 ரன்கள் குவித்து மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கேமரூன் கிரீன் 47 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 100 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் மும்பை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய கேமரூன் கூறுகையில் : ரோகித் சர்மா போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த கேப்டனின் கீழ் விளையாடுவது எனக்கு மிகவும் உதவி புரிந்துள்ளது. ஒட்டுமொத்தமாகவே மும்பை அணி மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த போட்டியில் நான் அதிரடியாக விளையாட காரணமே அணியின் அமைப்பு தான். ஏனெனில் எனக்கு முன்னதாக இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் பின்னர் சூரியகுமார் யாதவ் போன்ற அற்புதமான வீரர்களும் இருக்கும்போது இடையில் நான் அதிரடியாக விளையாடினால் எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைத்தேன்.

இதையும் படிங்க : GT vs RCB : இதைவிட வேற என்ன வேணும்? ஆர்.சி.பி அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு – ஹார்டிக் பாண்டியா அளித்த பேட்டி இதோ

அந்த வகையில் அற்புதமான அதிரடி ஆட்டத்தையும் வெளிப்படுத்தினேன். அதோடு என்னுடைய பவர் ஹிட்டிங்-க்கு காரணமாக பொல்லார்டு அதிக அளவில் எனக்கு பயிற்சியின் போது உதவி புரிகிறார் என கேமரூன் கிரீன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement