ஏற்கனவே அவங்க ரொம்ப வெயிட். இதுல இது வேறயா? – ஆஸ்திரேலிய அணியில் இணைந்த அதிரடி வீரர்

Camron-Green
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரானது தகுதிச்சுற்றுப் போட்டிகள் முடிவைடையவுள்ள வேளையில் அடுத்ததாக சூப்பர் 12 சுற்றினை நோக்கி முன்னேறி வரும் இவ்வேளையில் ஏற்கனவே இந்த தொடரில் காயம் காரணமாக இடம்பெறாமல் போனவர்களுக்கு மத்தியில் இந்த தொடரில் இடம் பெற்றிருந்த மேலும் சில வீரர்கள் அணியில் இருந்து காயம் காரணமாக தொடர்ச்சியாக வெளியேறி வருவது தற்போது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

aus 1

- Advertisement -

அந்த வகையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று இருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜாஷ் இங்கிலீஷ் காயம் காரணமாக இந்த டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியாகியிருந்தது.

அதனைத் தொடர்ந்து இவருக்கு பதிலாக யார் மாற்று வீரராக களமிறங்குவார் என்று அனைவரது மத்தியிலும் ஒரு கேள்வி இருந்தது. அந்த வகையில் ஏற்கனவே இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை என்றாலும் சமீபத்திய தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்திய கேமரூன் கிரீனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Cameron Green 1

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை நிரந்தர இடம் இல்லாமல் தவித்து வந்த இவர் தற்போது ஆஸ்திரேலிய அணிக்காக டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பான வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணியானது நடப்பு சாம்பியன் என்ற கவுரவத்துடன் கோப்பையை தக்க வைக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இவ்வேளையில் தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கும் கேமரூன் கிரீனுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது அந்த அணிக்கு மேலும் பலத்தை அளிக்கும் விதமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : போராடி களத்திலேயே உடைந்த 37 வயது வீரர், நமீபியாவுக்கு டிக்கெட் போட்ட அமீரகம், இந்தியாவுடன் மோதும் அணி இதுதான்

ஏனெனில் அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த இவர் பேட்டிங் மற்றும் பவுலிங் என அந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியையே மிரட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement