IPL 2023 : மினி ஏலத்தில் தனது பெயரினை பதிந்த ஆஸி அதிரடி ஆல்ரவுண்டர் – கோடிகள் குவியப்போறது உறுதி

Cameron-Green
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக 2023-ஆம் ஆண்டு 16-வது ஐபிஎல் தொடரானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் விளையாட இருக்கும் 10 அணிகளும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்களது அணியில் இருந்து வெளியேற்ற விரும்பிய வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதனை தொடர்ந்து அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வரும் டிசம்பர் மாதம் சிறிய அளவில் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த மினி ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளன.

IPL 2022 (2)

- Advertisement -

இந்நிலையில் தற்போது அனைத்து அணிகளுக்குமே சரியான ஆல்ரவுண்டர்கள் வேண்டும் என்ற நிலை இருப்பதால் ஆல்ரவுண்டர்களுக்கான விலை இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் எகிறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஸ்டோக்ஸ், சாம் கரன் போன்ற ஆல்ரவுண்டர்களுக்கு கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று தற்போது மினி ஏலத்தில் கோடிகளை குவிக்கப்போகும் ஒரு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரும் தனது பெயரினை ஐபிஎல் ஏலத்தில் பதிந்துள்ளார். அந்த வகையில் அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியில் துவக்க வீரராகவும், வேகப்பந்து வீச்சாளராகவும் அசத்திய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் நிச்சயம் ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்ப்பார் என்று தெரிகிறது.

ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் துவக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்டும் அவர் பந்துவீச்சிலும் நல்ல வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார். அதேபோன்று பீல்டிங்கிலும் அற்புதமாக செயல்படும் அவர் ஆஸ்திரேலிய அணியின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்படும் வேளையில் அவருக்கான போட்டி ஐபிஎல் அணிகளின் மத்தியில் நிச்சயம் பெரிய அளவில் இருக்கும்.

- Advertisement -

அதனால் அவர் அதிக விலைக்கு வாங்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது பெயரை மினி ஏலத்தில் பதிந்த அவர் கூறுகையில் : நான் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக என்னுடைய பெயரை பதிவு செய்துள்ளேன். இது எனது திறமையை நிரூபிக்க சிறந்த வாய்ப்பு. உலக அளவில் உள்ள சிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் சிறந்த வீரர்களுக்கு இடையே நானும் விளையாட இருப்பது மகிழ்ச்சி.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு திரும்பவுள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா. கம்பேக் கொடுக்கப்போவது எப்போது? – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் மூலம் என்னுடைய ஆட்டத்தை இன்னும் மேம்படுத்த முயற்சிப்பேன். அதேபோன்று இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி என்னை உலகிற்கு வெளிக்காட்டுவேன் என கேமரூன் க்ரீன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement