இந்திய அணிக்கு திரும்பவுள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா. கம்பேக் கொடுக்கப்போவது எப்போது? – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை என முக்கிய தொடர்களை இழந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய விமர்சனத்தை சந்தித்துள்ளது. ஏனெனில் சமீப காலமாகவே டி20 கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தி வந்தாலும் முக்கிய போட்டிகளில் தோல்வியை சந்தித்து வெளியேறி வருவது தொடர்கதை ஆகியுள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போட்டியில் கூட இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தது.

IND-Team

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி பெறும் இப்படிப்பட்ட மோசமான தோல்விகளுக்கு காரணம் பந்துவீச்சில் உள்ள குறைபாடு தான் என்று பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பலமாக இருந்தாலும் பவுலிங்கில் விக்கெட் எடுக்கும் வீரர்கள் யாரும் இல்லை என்று பலரும் பேசி வருகின்றனர். இந்தியாவின் இந்த சறுக்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பும்ராவிற்கு ஏற்பட்ட காயம் தான்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் பும்ரா ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக முதுகுப்பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக ஆசிய கோப்பையை தவறவிட்டார். அதன் பின்னர் ஆஸ்திரேலிய தொடருக்குள் மீண்டும் வந்து டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மேலும் அவரது காயத்தின் தன்மை அதிகரித்ததால் உலகக்கோப்பை தொடரிலிருந்தும் விலகினார். பொதுவாகவே இதுபோன்ற முதுகில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது ஐந்து முதல் ஆறு (5-6) மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

Bumrah 1

ஆனால் பும்ரா அறுவை சிகிச்சை செய்யாமல் இயற்கையாகவே குணமடைந்து வருவதால் விரைவில் அவர் அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது தனது காயத்திற்கு உண்டான சிகிச்சை மற்றும் பயிற்சி ஆகியவற்றை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மேற்கொண்டு வரும் பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தனது கம்பேக் குறித்து ஒரு முக்கியமான கருத்தினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் “நல்ல நேரங்கள் வர இருக்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த கருத்தின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் தரவுள்ளதை அவர் உறுதி செய்துள்ளார். இந்திய அணி தற்போது நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வேளையில் அடுத்ததாக வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.

இதையும் படிங்க : ராகுலா – தவானா? 2023 உ.கோ’யில் ரோஹித் சர்மாவுடன் ஓப்பனராக களமிறங்க தகுதியானவர் யார் – டிகே கருத்து இதோ

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால் இந்த பங்களாதேஷ் தொடர் முடிந்து அடுத்ததாக இந்திய அணி மோதும் தொடரில் அவர் கட்டாயம் அணியில் கம்பேக் கொடுப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement