- Advertisement -
ஐ.பி.எல்

பத்தலன்னு சொன்னாங்க.. அப்போ விராட் கோலி செஞ்சதை பாத்து ஆச்சர்யப்பட்டேன்.. கேமரூன் க்ரீன் வியப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டை போலவே ஐபிஎல் தொடரிலும் ரன் மெஷினாக செயல்பட்டு வரும் அவர் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்துள்ளார். மேலும் 2024 சீசனில் 741 ரன்கள் குவித்த அவர் ஆரஞ்சு தொப்பியை வென்று பெங்களூரு பிளே ஆஃப் செல்ல உதவினார்.

முன்னதாக அத்தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் விராட் கோலி கொஞ்சம் மெதுவாக விளையாடினார். அப்போது சொந்த சாதனைகளுக்காக விராட் கோலி சுயநலத்துடன் மெதுவாக விளையாடுவதாக வழக்கமான விமர்சனங்கள் எழுந்தன. அதனால் உடனடியாக ஆட்டத்தை மாற்றிய விராட் கோலி அதிரடியாக விளையாடி தம்மை சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடக்கூடிய சாம்பியன் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார்.

- Advertisement -

ஸ்ட்ரைன் ரேட் பத்தல:

இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் விமர்சனங்கள் எழுந்த போது உடனடியாக விராட் கோலி அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய விதத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்ததாக ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் பகுதியில் அவர் ஏராளமான ரன்கள் குவித்தார் என்று நினைக்கிறேன்”

“ஆனால் அதை நாங்கள் எதிர்பார்க்கும் ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் எடுக்கவில்லை. அப்போது அவர் தன்னை மகிழ்ச்சியாக மாற்றிக்கொண்ட அவர் பவுலர்களை முதல் பந்திலிருந்தே அதிரடியாக எதிர்கொண்டார். அதன் பின் நம்ப முடியாத வகையில் விளையாடிய அவருக்கு அத்தொடர் அற்புதமாக அமைந்தது. அந்த வகையில் விமர்சனங்கள் எழுந்த போது அவர் தனது ஆட்டத்தை மாற்றியது வேடிக்கையானது”

- Advertisement -

மகத்தான விராட் கோலி:

“விராட் பேட்டிங் செய்வதை பார்த்து எப்படி கடினமானதையும் இவர் கச்சிதமாக செய்கிறார் என்ற ஆச்சரியம் எனக்கு இருந்தது. அவர் செய்ததை நாமும் செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அவர் அனைத்தையும் எளிதாக காட்சிப்படுத்தினார். அதே சமயம் வடிவத்தின் அடிப்படையில் அவர் என்னை விட கொஞ்சம் வித்தியாசமானவர். எனவே அவரைப் போல் என்னால் இறங்கி சென்று அடிக்காமல் இருக்க முடியாது”

இதையும் படிங்க: பும்ராவுக்கு நிகராக பாண்டியா.. 2024 டி20 உ.கோ வெற்றியில் பங்காற்ற அந்த வலிகள் தான் காரணம்.. ஜான்டி ரோட்ஸ்

“இருப்பினும் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் கண்டிப்பாக இருக்கிறது. குறிப்பாக இவ்வளவு வளர்ந்தும் தொடர்ந்து கற்றுக்கொள்ள விரும்புவது அவரைப் பற்றிய பிடித்த விஷயமாகும். அந்த வகையில் அவர் எனக்கு கொடுத்த எனர்ஜிக்காக நன்றி உடையவனாக இருக்கிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2024 – 25 பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விராட் கோலி – கேமரூன் கிரீன் ஆகியோர் எதிரணிகளில் நாட்டுக்காக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -