ஷேன் வார்ன் இந்த விஷயத்தை மேலே இருந்து பார்த்து மகிழ்ச்சி அடைந்திருப்பார் – பட்லர் உருக்கம்

Buttler
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 2-வது குவாலிபயர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் 157 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தான் அணியானது ஜாஸ் பட்லரின் அபார சதம் காரணமாக 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 161 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் குவித்த ராஜஸ்தான் அணியை சேர்ந்த துவக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Jos Buttler vs RCB

- Advertisement -

இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ராஜஸ்தான் அணி குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து அவரது ஆட்டம் குறித்து பேசியிருந்த ஆட்டநாயகன் ஜாஸ் பட்லர் கூறுகையில் : இந்த போட்டியின் போது நான் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் தான் களமிறங்கினேன். ஆனாலும் கடைசியாக நடைபெற்ற போட்டியில் நான் சிறப்பாக விளையாடி இருந்ததால் இந்த போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று நினைத்தேன்.

இந்த தொடரில் எனது ஆட்டத்தினை இரண்டு பாதியாக பிரித்து எனது செயல்பாடுகளை வகைப்படுத்தலாம். முதல் பாதியில் மிகச் சிறப்பாக விளையாடினேன் ஆனால் இரண்டாவது பாதியில் தற்போதுதான் மீண்டும் பார்முக்கு திரும்பி உள்ளேன். இடையில் நான் சில போட்டிகளில் சரியாக விளையாடாத போதும் அணியின் நிர்வாகம் எனக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அதோடு குமார் சங்ககாரா மற்றும் உதவியாளர்கள் என பலரும் எனக்கு உதவினார்கள்.

RR

அவர்களுடன் நான் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன். அவர்கள் அனைவரும் எனக்கு அளித்த ஆதரவே மீண்டும் என்னை சிறப்பான பேட்டிங் பார்மிற்கு திருப்பி உள்ளது. கடைசியாக கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நான் விளையாடிய விதத்தை இந்த போட்டியிலும் கொண்டு வர முயற்சித்தேன். அந்த வகையில் இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

- Advertisement -

சங்ககாரா என்னிடம் எப்போதுமே ஒரு விஷயத்தை கூறுவார். எவ்வளவு நேரம் நாம் களத்தில் நிற்கிறோமோ அதன்பின்னர் ரன்கள் தானாக வரும் என்று கூறுவார். அந்த வகையில் நான் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடினேன். மேலும் எனது பேட்டிங்கில் மூலம் ராஜஸ்தான் அணியை ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதையும் படிங்க : நல்லவேளை அவங்க 2 பேரையும் சீக்கிரம் அவுட் பண்ணிட்டோம். இல்லனா அவ்ளோதான் – சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி

அதே வேளையில் ஷேன் வார்ன் அவரது மறைவு மறக்க முடியாத ஒன்று. ராஜஸ்தான் அணிக்காக முதல் சீசனில் கோப்பையை வாங்கி தந்த அவரை நாங்கள் இந்த ஆண்டு தவறவிட்டுள்ளோம். நிச்சயம் நாங்கள் பெற்ற இந்த வெற்றியை மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் அவர் பெருமை பட்டிருப்பார் என பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement