5 நாள் ஆட்டத்தின்போது திடீரென மைதானத்தை விட்டு வெளியேறிய பும்ரா – நடந்தது என்ன ?

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களை குவிக்க அதனை தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. மூன்றாம் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் குவித்திருந்தது.

Ishanth

- Advertisement -

மழை காரணமாக 4 ஆம் நாள் போட்டி முழுவதும் நடைபெறாமல் போன வேளையில் நியூசிலாந்து அணி இன்று 5 ஆவது நாளில் இந்திய வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மா மற்றும் ஷமி ஆகியோரது சிறப்பான பந்து வீச்சினால் தற்போது 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்திய அணியை விட தற்போது 30 ரன்கள் பின்தங்கிய விளையாடி வரும் நியூசிலாந்து அணி விரைவில் முதல் இன்னிங்சை முடித்துவிடும் என்று தெரிகிறது.

நாளை ஒருநாள் ஆட்டம் எஞ்சி உள்ளதால் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவும் அரிதான ஒரு வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இன்றைய போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மைதானத்தில் இருந்து அவசர அவசரமாக ஓய்வறைக்கு சென்று திரும்பியது தற்போது இணையத்தில் புகைப்படங்களாக வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அதற்கான காரணமும் தற்போது வெளியாகியுள்ளது.

bumrah 2

அதன்படி தற்போது ஐசிசி நடத்தும் இந்த இறுதிப் போட்டியில் பிரத்யேக சீருடை உடனே இந்திய வீரர்கள் பங்கேற்க வேண்டும். ஆனால் பும்ரா வழக்கமாக பயன்படுத்தும் டெஸ்ட் ஜெர்சி அணிந்து வந்து ஒரு ஓவரையும் வீசிவிட்டார். இதனை சற்று நேரம் கழித்து கவனித்தபோது மீண்டும் ஓய்வறைக்கு சென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான ஜெர்சியை அணிந்துகொண்டு மீண்டும் உள்ளே வந்தது தற்போது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement