- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கபில் தேவின் 33 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் நூலிழையில் இருக்கும் பும்ரா – விவரம் இதோ

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியின் போது தோல்வியை சந்தித்தது.

கபில் தேவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் பும்ரா :

அடுத்ததாக பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக பெருமளவு பாதிக்கப்பட்டதால் மூன்றாவது போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இதன் காரணமாக தற்போதைய நிலையில் இரு அணிகளும் தலா வெற்றியுடன் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றனர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் எஞ்சிய இரண்டு ஆட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் இந்த கடைசி இரண்டு போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவின் 33 ஆண்டுகள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கு கிடைத்துள்ளது.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடரில் மட்டும் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

- Advertisement -

கடந்த 1991-92 ஆகிய ஆண்டுகளில் கபில் தேவ் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒரு தொடரில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அந்த சாதனையை தற்போது பும்ரா முறியடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் பும்ரா – விவரம் இதோ

மேலும் இந்திய அணிக்காக இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 194 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வேளையில் மேலும் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 200 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய இந்திய வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -