பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் பும்ரா – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.

200 விக்கெட்டுகளை நெருங்கிய ஜஸ்ப்ரீத் பும்ரா :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 26-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் “பாக்சிங் டே” போட்டியாக நடைபெற உள்ளது. எப்போதுமே பாக்சிங் டே டெஸ்ட் போட்டி என்றால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியும் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தும் தருவாயிற்காக காத்திருக்கிறார்.

அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இதுவரை இந்திய அணிக்காக 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 194 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். எதிர்வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் மேலும் அவர் 6 விக்கெட் வீழ்த்தினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

- Advertisement -

இதையும் படிங்க : பயந்து ரெண்டும் கெட்டானா இல்லாம.. இதை செஞ்சா 6இல் ரோஹித் தான் ஆஸிக்கு டேஞ்சர்.. ரவி சாஸ்திரி அட்வைஸ்

ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்காக அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 37 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். அவருக்கு அடுத்து தற்போது இரண்டாவது இடத்தில் பும்ரா இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement