பயந்து ரெண்டும் கெட்டானா இல்லாம.. இதை செஞ்சா 6இல் ரோஹித் தான் ஆஸிக்கு டேஞ்சர்.. ரவி சாஸ்திரி அட்வைஸ்

Ravi Shastri
- Advertisement -

ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அந்தத் தொடர் 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமனில் இருக்கிறது. அந்த நிலையில் 4வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்குகிறது. அப்போட்டியில் இந்தியா வெற்றி பெற கேப்டன் ரோஹித் சர்மா அசத்துவது அவசியமாகிறது.

ஏனென்றால் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் இத்தொடரின் முதல் போட்டியிலேயே இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் அதன் பின் தலைமையில் இந்தியா இதுவரை வெற்றி காண முடியாமல் தடுமாறி வருகிறது. அதற்கு மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் ரோஹித் சர்மா பெரிய ரன்கள் குவிக்காததும் முக்கிய காரணமாக அமைந்து வருகிறது.

- Advertisement -

ரெண்டும் கெட்டான்:

அதனால் அவர் மீண்டும் துவக்க வீரராக விளையாட வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவித்தார்கள். இந்நிலையில் ரோஹித் சர்மா அடிக்கலாமா வேண்டாமா என்ற இரண்டும் கெட்டான் மனநிலையில் இருப்பதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். எனவே ஹிட்மேன் என்றழைக்கப்படும் ரோஹித் பயப்படாமல் அடித்தால் ஆஸ்திரேலிய அணிக்கு ஆபத்தானவராக இருந்து இந்தியாவை வெற்றி பெற வைக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தனது தந்திரோபாயத்தில் ரோகித் கொஞ்சம் மாற்றம் செய்வதை பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் 6வது இடத்தில் இப்போதும் அவரால் ஆபத்தானவராக செயல்பட முடியும். அதற்கு முதலில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் எதிரணியை அட்டாக் செய்யும் தெளிவான மனநிலையை பெற வேண்டும்”

- Advertisement -

அட்டாக் பண்ணுங்க:

“நீங்கள் கடைசியாக தடுக்கலாமா அல்லது அட்டாக் செய்யலாமா என்ற 2 மனதில் இருப்பீர்கள். ரோஹித் சர்மா விஷயத்தில் அவர் அட்டாக் செய்ய வேண்டும். 6வது இடத்தில் லென்த்தை முன்னதாகவே பிடித்து எதிரணியை அட்டாக் செய்ய வேண்டும். குறிப்பாக முதல் 10 – 15 நிமிடங்களை தாண்ட வேண்டும். அதைச் செய்தால் ஏன் உங்களுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியை அட்டாக் செய்ய முடியாது?”

இதையும் படிங்க: ஜுரேல் இந்திய அணியில் அந்த வாய்ப்பை பெற.. 2025 ஐபிஎல் தொடரில் என்னோட இடத்தை தரேன்.. சாம்சன் அறிவிப்பு

“எனவே இதுவே நீங்கள் ஃபார்முக்கு திரும்புவதற்கும் இந்தியாவை வெற்றி பெற வைப்பதற்குமான சிறந்த வழி என்று நினைக்கிறேன். ஏனெனில் 6வது இடம் மிகவும் முக்கியமானதாகும். பொதுவாக அதிரடியாக அட்டாக் செய்யும் திறன் கொண்டவர்கள் தான் 6வது இடத்தில் விளையாடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் சூழ்நிலையை நன்றாக படிப்பார்கள். ஒருவேளை ஆரம்பத்திலேயே விக்கெட் விழுந்தால் நீங்கள் நங்கூரமாக விளையாடலாம். மற்றபடி நீங்கள் அதிரடியாக விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement