நான் இதை மட்டும் தான் முயற்சித்தேன். நியூசிலாந்தில் முதல் முறையாக இதை செய்ததில் மகிழ்ச்சி – பும்ரா பேட்டி

Bumrah-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 5 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆட்ட நாயகனாகவும், துவக்க வீரர் ராகுல் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

Bumrah-2

- Advertisement -

இந்தப் போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் நேற்றைய போட்டியில் அவர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பிறகு போட்டி முடிந்தவுடன் பேசிய பும்ரா இந்த போட்டி குறித்து கூறுகையில் :

இது மிகவும் நன்றான ஒரு விடயம். ஒரு கட்டத்தில் போட்டி அவர்கள் பக்கம் நெருங்கியது ஆனால் ஒன்று இரண்டு நல்ல ஓவர்களை நாங்கள் வீசினால் போட்டியின் நெருக்கத்தில் எங்களால் செல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. அதன்படி காற்று எந்த திசையில் வீசியது அதனை கணித்து நீண்ட எல்லை இருக்கும் பக்கத்தை கணித்து பந்து வீசினேன்.

bumrah 2

அதனால் என்னால் சிறப்பாக வீச முடிந்தது. இந்த தொடரில் சில விஷயங்களை நான் கற்றுக் கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வெவ்வேறு மைதானங்கள் வெவ்வேறு பரிமாணங்கள் நியூசிலாந்தில் இதுபோன்ற எனது பயணம் முதல்முறை. அதற்கு சிறப்பான முடிவு கிடைத்துள்ளது மகிழ்ச்சி என்றும் பும்ரா நெகிழ்ச்சியாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement