வான்கடே எனக்கு ராசி இல்லை. இந்த மைதானம் மட்டுமே எனக்கு எப்போதும் ராசியானது – பும்ரா ஓபன் டாக்

Bumrah
- Advertisement -

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 21 நாள் லாக்டவுன் ஆகியுள்ளது . இதனால் கிரிக்கெட் நட்சத்திரங்கள் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் விழிப்புணர்வோடு அவரவர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி பாதுகாப்பாக இருக்கின்றனர்.

Bumrah

- Advertisement -

இந்நிலையில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் நேரலையில் வரும் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோர் அனைவரும் விழிப்புணர்வு செய்வதோடு தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களுக்காக அவ்வப்போது நேரலையில் வந்து அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கின்றனர். அதன்படி தற்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ரோஹித் சர்மாவுடன் செய்த நேரலையில் தனது கிரிக்கெட் குறித்து பல்வேறு சுவாரசியமான விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

Bumrah

அதன்படி இந்திய அணியின் யார்க்கர் மன்னனாக திகழும் பும்ரா ஏகப்பட்ட யார்க்கர்களை எதிரணி வீரர்களுக்கு வீசி இறுதி நேரத்தில் விக்கெட் வீழ்த்தும் திறமை படைத்தவர் என்பது நாம் அறிந்ததே. மேலும் இவர் தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த டெத் பவுலர் என்ற பெயரையும் அவர் எடுத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது அவர் இந்தியாவில் தனக்கு பிடித்த ராசியான மைதானம் குறித்து ரோஹித் சர்மாவுடன் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் கூறியதாவது : இந்திய மைதானங்கள் அனைத்திலும் பந்துவீசுவது மிகவும் சவாலானது. ஒவ்வொரு மைதானமும் ஒவ்வொரு தன்மையுடன் இருக்கும். இருப்பினும் தொடர்ச்சியான பயிற்சி மூலம் நான் சிறப்பாக பந்துவீசி வருகிறேன்.

bumrah

இருப்பினும் எனக்கு மும்பை மைதானம் எனக்கு ராசியில்லை. ஏனெனில் மும்பை வான்கடே மைதானம் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமானது. அங்கு பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது கடினம். ஆனால் ஐதராபாத் மைதானம் பந்துவீச்சிற்கு ஒத்துழைக்கும் மைதானம். அங்கு பந்துவீச எனக்கு மிகவும் பிடிக்கும் மேலும் அந்த மைதானமே எனக்கு இந்தியாவில் பிடித்த ராசியான மைதானம் என்று பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement