இப்படி நடக்கும் என்று எனக்கு முன்கூட்டியே தெரியும். தெ.ஆ தொடரை தவறவிட்ட பும்ரா – வருத்தம்

Bumrah
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.

Bumrah-1

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் இருந்து முதுகுப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளார். பும்ராவின் விலகல் இந்திய அணிக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது. இந்நிலையில் பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்காக பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

பும்ரா அதில் பதிவிட்டவையாவது : காயங்கள் என்பவை விளையாட்டில் ஒரு பகுதி ஆகும். அது எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பது எனக்குத் தெரியும். அதே போன்று நான் காயத்தில் இருந்து மீண்டு வர எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் தலைநிமிர்ந்து சொல்கிறேன் என்னுடைய கம்பேக் மிகவும் வலிமையாகவும் திடமாகவும் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமின்றி காயத்தில் இருந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவரது பதிவிற்கு கமெண்டுகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்திய அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 62 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

Advertisement