- Advertisement -
உலக கிரிக்கெட்

IND vs ENG : டெஸ்ட் கிரிக்கெட்டில் லாராவின் உலக சாதனையை உடைத்த பும்ரா. நம்பமுடியலயா? – படிங்க புரியும்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது இன்று இரண்டாம் நாளாக நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழுந்து 338 ரன்கள் குவித்து இருந்தது. ரிஷப் பண்ட் 146 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த வேளையில் ஜடேஜா 83 ரன்கள் உடன் களத்தில் இருந்தார். அதன்படி அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா நிதானம் கலந்த அதிரடியின் மூலம் சதம் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு 104 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த முதல் இன்னிங்க்ஸை இந்திய அணி ஆரம்பித்தபோது 98 ரன்களுக்கு ஐந்து விக்கெட் விழுந்ததால் நிச்சயம் இந்திய அணி 200 ரன்களை கூட தொடாது என்று பலரும் நினைத்திருக்க வாய்ப்புண்டு.

- Advertisement -

ஆனால் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக தற்போது இந்திய அணியானது தங்களது முதலில் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸ் விளையாடி வரும் வேளையில் மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனான பும்ரா பேட்டிங் இறங்கியதும் கடைசி நேரத்தில் அதிரடியை கையில் எடுத்தார். அதிலும் குறிப்பாக ஸ்டூவர்ட் பிராட் வீசிய 85-தாவது ஓவரில் (4,Wd5,N6,4,4,4,6,1) இரண்டு சிக்ஸர்கள், நான்கு பவுண்டரி, ஒரு வைட் பவுண்டரி மற்றும் ஒரு நோபல் சிக்ஸ் என 35 ரன்களை தெறிக்க விட்டு ஒரு உலக சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

அந்த சாதனை யாதெனில் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்களாக லாரா தென் ஆப்பிரிக்க பவுலருக்கு எதிராக 28 ரன்கள் அடித்ததே உலகசாதனையாக இருந்தது. ஆனால் இன்று அதனை முறியடித்த ஜஸ்ப்ரீத் பும்ரா இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் அட்டகாசமான 2 சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரி என 35 ரன்கள் குவித்து டெஸ்ட் வரலாற்றில் பேட்ஸ்மேன் ஒருவர் ஒரே ஓவரில் அடித்த அதிகபட்ச ரன்களாக வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs ENG : என்னாது மெக்கல்லமா, டிராவிட்னா யாருனு தெரியுமா – இங்கிலாந்தை தெறிக்கவிடும் இந்திய ரசிகர்கள்

35 J பும்ரா off S பிராடு பர்மிங்காம் 2022 *
28 B லாரா off R பீட்டர்சன் ஜோகனஸ்பர்க் 2003
28 G பெய்லி off J ஆண்டர்சன் பெர்த் 2013
28 K மஹாராஜ் off J ரூட் போர்ட் எலிசபெத் 2020

நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இனிவரும் யாராலும் இந்த சாதனையை நெருங்குவது மிக கடினம் என்றே கூறலாம். இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்த பும்ரா 16 பந்துகளில் 31 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by